திருத்தங்கள்

திருத்தங்களை மூன்று தொகுதிகளின் கீழ் வகைப்படுத்தலாம்.
 • உறுப்பினர் பெயர்களில் திருத்தங்கள்
 • கணக்குகளில் திருத்தங்கள்
 • தேசிய அடையாள அட்டை இலக்கங்களில் திருத்தங்கள்

 

உறுப்பினர் பெயர்களில் திருத்தங்களைச் செய்வதற்கான காரணங்கள்
 • உறுப்பினர் பெயரின் முதலெழுத்துக்களில் காணப்படும் பிழைகள்
 • பெயரின் முதலெழுத்துக்களை சேர்த்தல் அல்லது இல்லாமல் செய்தல்
 • முதலெழுத்துக்கள் சரியான ஒழுங்கிலில்லாமை
 • முதலெழுத்துக்கள் குறிக்கும் பெயர்களில் பிழைகள்
 • சரியான பெயருக்குப் பதிலாக இன்னொரு உறுப்பினரின் பெயரைத் தவறுதலாக பயன்படுத்தல்
 • பிறப்புச் சான்றிதழில் தரப்பட்டுள்ள பெயருக்குப் பதிலாக புதிய பெயர்களைப் பயன்படுத்தல்
 • பிறப்புச் சான்றிதழின் 13ஆம் பிரிவின் கீழ் அல்லது திருமணத்தின் பின்னர் உறுப்பினரின் பெயர் மாற்றப்படுதல்
 • பிழையான பெயரை அல்லது செல்லப் பெயரைப் பயன்படுத்தல்
 • ஒரே இலக்கத்தின் கீழ் அநேக உறுப்பினர்களுக்கான பங்களிப்புக்களைக் கொடுப்பனவு செய்தல

 

உறுப்பினர் பெயர்களைத் திருத்துதல்

திருத்தத்தின் தன்மையினைப் பொறுத்து பின்வரும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

 •  அடையாள அட்டையின் அத்தாட்சியுடன் பழைய அல்லது பிழையான பெயரையும் புதிய அல்லது சரியான பெயரையும் உறுதிப்படுத்துகின்ற தொழில்தருநரிடமிருந்தான கடிதமொன்றினை அடையாளத்தை நிரூபிக்கும் சான்றுடன் சேர்த்து கண்காணிப்பாளர், ஊ.சே. நிதியம், இலங்கை மத்திய வங்கி, கொழும்பு 01 அல்லது தொழில் ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப்படுதல் வேண்டும். பெயரின் முதலெழுத்துக்கள் தொடர்பிலான பிழைகளைப் பொறுத்தவரையில் இது போதுமானதாகும்.
 •  முன்னைய தொழில்தருநர் இனிமேல் இயங்காதவராக இருப்பின் தொழில் திணைக்களத்திலுள்ள மூடப்பட்ட கம்பனிகள் குழுவிற்கு அறிவிக்கப்படுதல் வேண்டும்.
 •  பெயரினை முழுமையாக மாற்றும் விடயத்தினைப் பொறுத்தவரையில் அனைத்துப் பங்களிப்பு விபரங்களையும் கோரிக்கைக் கடிதத்துடன் சேர்த்து அனுப்புதல் வேண்டும்.
 •  திருமணம் அல்லது பிறப்புச் சான்றிதழில் மாற்றம் என்பன காரணமான மாற்றங்களுக்கு அனைத்துப் பிறப்புÆ திருமணச் சான்றிதழ்களின் பிரதிகளையும் தொழில்தருநர்களினால் உறுதிப்படுத்தப்பட்ட சட்ட ரீதியான ஆவணங்களையும் அனுப்பி வைத்தல் வேண்டும். முன்னைய தொழில்தருநர் தொடர்ந்தும் இயங்காத சந்தர்ப்பத்தில் அது பற்றி தொழில் திணைக்களத்திலுள்ள மூடப்பட்ட கம்பனிகள் குழுவிற்கு அறிவித்தல் வேண்டும்.

 

கணக்குகளைத் திருத்துவதற்கான காரணங்கள்
 •  உறுப்பினர் பங்களிப்புக்களிலுள்ள குறைபாடுகள்.
 •  பெயர் மற்றும் தேசிய அடையாள அட்டைப் பொருத்தப்பாடின்மையின் காரணமாக உருவாக்கப்பட்ட போலி இலக்கங்களை சீர்செய்தல்.
 • ஒரே இலக்கத்தின் கீழ் பல உறுப்பினர்களுக்கான பங்களிப்புக்களைச் செலுத்துதல் அல்லது பல்வேறு இலக்கங்களின் கீழ் உறுப்பினர் ஒருவருக்கான பங்களிப்புக்களைச் செலுத்துதல்.
 • பங்களிப்புக் கொடுப்பனவுகளை மீளளிக்கப்பட்ட கணக்கொன்றிற்கு வரவு வைத்தல்.

 

உறுப்பினர் கணக்குகளைத் திருத்துதல்

திருத்தங்களின் தன்மையினைப் பொறுத்து பின்வரும் நடவடிக்கைகளை எடுத்தல் வேண்டும்.

 • கணக்குகளில் திருத்தங்களைக் கோருகின்ற தொழில்தருநரிடமிருந்து கண்காணிப்பாளர், ஊ.சே.நிதியம், இலங்கை மத்திய வங்கி, கொழும்பு 1 என்ற முகவரிக்கு கடிதமொன்று அனுப்புதல் வேண்டும்.
 • ஆவணங்களுடன் தேசிய அடையாள அட்டை, பிறப்புச் சான்றிதழ் என்பனவற்றின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதிகள் இணைக்கப்படுவது அவசியமாகும்.
 • தேசிய அடையாள அட்டையிலும் ‘பீ” அட்டையிலுமுள்ள பெயர் ஒன்றாக இருத்தல் வேண்டும். இல்லையெனில் ‘பீ” அட்டையை தேசிய அடையாள அட்டைக்கிணங்கத் திருத்திக் கொள்வது அவசியமாகும்.
 • இணைக்கப்பட்டுள்ள படிவத்திற்கிணங்க திருத்தங்கள் தொடர்பான அனைத்து ஊழியர்களுக்குமான மாதாந்தப் பங்களிப்பு விபரங்களை தொழில்நிலை ஆரம்பித்ததிலிருந்து தொழில்நிலை முடிவடையும் வரையிலான பூரணமான மாதாந்தப் பங்களிப்பு விபரங்களைச் சமர்ப்பித்தல் வேண்டும்.
 • தொழில்தருநர் செயற்படவில்லையாயின் துணை தொழில் ஆணையாளர்Æ தொழில் அலுவலரிடமிருந்து பெற்ற ஆலோசனைக் கடிதமொன்றினை மற்றைய தொடர்பான கிடைக்கத்தக்க ஆவணங்களுடன் சேர்த்து சமர்ப்பித்தல் வேண்டும்.
 • இறந்த உறுப்பினரைப் பொறுத்தவரையில் தேசிய அடையாள அட்டை மற்றும் ‘பீ” அட்டை என்பன கிடைக்காதவிடத்து ஆலோசனைக் கடிதத்தை துணைத் தொழில் ஆணையாளர்Æ தொழில் அலுவலர், தொழில் திணைக்களம், ‘எல்” பிரிவு, 8ஆவது மாடி, நாரயன்பிட்டிய, கொழும்பு 5 இலிருந்து சமர்ப்பிப்பது அவசியமானதாகும்.
 • அநேக உறுப்பினர்களுக்குமான பங்களிப்புக்கள் ஒரே இலக்கத்தின் கீழ் அல்லது உறுப்பினரின் பங்களிப்புக்கள் வேறுபட்ட இலக்கங்களின் கீழ் வரவு வைக்கப்பட்டிருக்குமாயின் முழுமையான பங்களிப்பு விபரங்களும் சரியான உறுப்பினர் இலக்கங்களும் கடிதத்தில் மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டு ‘பீ” அட்டையின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதியுடன் சமர்ப்பிக்கப்படுவது அவசியமானதாகும்.
 • பங்களிப்புக்கள் மீளளிக்கப்பட்ட கணக்கொன்றில் வரவு வைக்கப்பட்டிருக்குமாயின் முதல் கொடுப்பனவின் பின்னர் வரவு வைக்கப்பட்ட பங்களிப்புக்களை மாற்றல் செய்வதற்காக புதிய உறுப்பினர் கணக்கு இலக்கமொன்றினை உருவாக்குவது அவசியமாகும். புதிய இலக்கத்திற்காக ‘பீ” அட்டையை இணைக்கவும்.