கிடைத்தமை பற்றி அறிவித்தல் மற்றும் உறுப்பினர் கூற்றுக்கள்

பங்களிப்புக்களின் பெறுகைகளை உறுதிப்படுத்தல்
 • இலத்திரனியல் வழிமுறையொன்றினூடான பணவனுப்பல்களை தயாரிப்பதற்காக கணனி
  மயப்படுத்தப்பட்ட முறைமையொன்று கொடுப்பனவு மேற்கொள்ளப்பட்டமையை உடனடுத்து
  கொடுப்பனவு தொடர்பான அறிவித்தலை மேற்கொள்ளும் விதத்தில் உருவாக்கப்படும்.
 • கொடுப்பனவு தொடர்பான அறிவித்தல்கள் கொடுப்பனவு வரவு வைக்கப்பட்டதன் பின்னர்
  அனைத்து நிறுவனங்களுக்கும் அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும் அல்லது நேரடியாகக்
  கொடுப்பனவுகளைக் கையளித்தவர்கள் கருமபீடத்திலே உடனடியாக கொடுப்பனவு கிடைத்தமை
  பற்றிய அறிவித்தல்களைப் பெற்றுக்கொள்ளலாம். மூலப் பற்றுச்சீட்டினைப் பெறாத
  சந்தர்ப்பத்தில் தொழில்தருநர்களுக்கு கொடுப்பனவுகளை உறுதிப்படுத்துகின்ற நகல்
  பற்றுச்சீட்டொன்று வழங்கப்படும். எனினும், நகல் பற்றுச்சீட்டினைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு
  தொழில்தருநர்கள் கொடுப்பனவு தொடர்பான தகவல்களைச் சமர்ப்பித்தல் வேண்டும்.
  (ஆவணங்கள் சொந்தக்காரர்களுக்கு அல்லது சொந்தக்காரர்களினால் கடித மூலம்
  அதிகாரமளிக்கப்பட்ட முகவர்களுக்கு வழங்கப்படும்.)
 • உறுப்பினர் கூற்றுக்கள்

உறுப்பினர் நிலுவைக் கூற்றுக்கள்
 • ஒவ்வொரு ஆறு மாத காலத்திலும் ஊ.சே. நிதியத்தினால் வழங்கப்பட்ட ஊழியர்களுக்கான
  அரையாண்டுக் கூற்றுக்களை அவருக்கு வழங்கப்பட்டமையினை உறுதிப்படுத்திக்
  கொள்ளவும்.
 • உறுப்பினர் கூற்றுக்களை அவர்களிடையே விநியோகிப்பதற்குத் தேவையான
  ஒழுங்குகளைச் செய்யவும்.
 • புலம்பெயரும் உறுப்பினர்களின் கணக்குகளை விரைந்து இற்றைப்படுத்தும் பொருட்டு
  தொழில்தருநர்களின் கோரிக்கைக் கடிதமொன்றையும் உறுதிப்படுத்தப்பட்ட ஷசி|
  படிவத்தையும் அனுப்பி வைத்தல் வேண்டும்.