பங்களிப்பு அனுப்பும்போது

பங்களிப்புக்களையும் உறுப்பினர் பங்களிப்பு விபரங்களையும் அனுப்புவதில் பின்பற்றப்பட வேண்டிய படிமுறைகள்
 • (அ)ஊழியர்களுக்கான ஊ.சே.நிதிய உறுப்பினர் இலக்கங்களை எண் கணித இலக்க ஒழுங்கில் வழங்கவும். கடந்த காலத்தில் அல்லது தற்பொழுது இன்னொரு உறுப்பினருக்கு ஏற்கனவே வழங்கிய இலக்கத்தினை வழங்க வேண்டாம். தொழில்தருநர் ஏற்கனவேயுள்ள உறுப்பினர் விபரங்களை ‘உறுப்பினர் விபரங்கள்” இணைப்பினூடாக சாரிபார்த்துக்கொள்ளமுடியும்.
 • (ஆ)ஊழியரின் தேசிய அடையாள அட்டை இலக்கத்தினை உள்ளடக்கவும்.
 • (இ)ஊழியர்களின் குறிப்பிட்டதொரு மாதத்திற்கான மொத்த வருவாயின் அடிப்படையில் ஒவ்வொரு ஊழியரினதும் (குறைந்தபட்சம் ஊழியரிடமிருந்து 8 சதவீதம் தொழில்தருநரிடமிருந்து 12 சதவீதம்) பங்களிப்புக்களைக் கணித்தல்
  மொத்த வருவாய்களின் வரைவிலக்கணம்: இது ஊழியர் சம்பளம், கூலிகள் மற்றும் கட்டணங்கள், வாழ்க்கைச் செலவுப்படி, விடுமுறைக் கொடுப்பனவுகள், தொழில்தருநரினால் விநியோகிக்கப்பட்ட சமைத்த அல்லது சமைக்காத உணவின் காசுப் பெறுமதி, உணவுப்படி, கழிவுகள் (தரகுகள்) வேலையின் அளவுக்கேற்ற கொடுப்பனவுகள் மற்றும் ஒப்பந்த அடிப்படையிலான கொடுப்பனவுகள் போன்ற வடிவிலமைந்த குறித்துரைக்கப்பட்ட ஊதியங்கள் மற்றும் கொடுப்பனவுகளின் ஏதேனும் வகை என்பனவற்றை உள்ளடக்குகிறது.
 • (ஈ)பங்களிப்புடன் சேர்த்து உறுப்பினர் பங்களிப்புக்களின் விபரங்களையும் அனுப்பி வைக்கவும்.உறுப்பினாரின் பங்களிப்பு விபரங்களில்லாமல் அனுப்பப்படும் பங்களிப்புக்கள் உறுப்பினர் கணக்கில் வரவு வைக்கப்படமாட்டாது என்பதுடன் இது சிக்கல்களுக்கும் தண்டங்களுக்கும் கூட வழிவகுக்கலாம்.
 • (உ)கொடுப்பனவு அனுப்பப்படவேண்டிய திகதி: மாதாந்தப் பங்களிப்புக்களை அடுத்துவரும் மாதத்தின் இறுதி வேலை நாள் காலாவதியாவதற்கு முன்னதாக ஊ.சே. நிதியத்தினை வந்தடையுமாறு அனுப்பி வைக்கவும். இல்லையெனில் தாமதத்திற்கேற்ப தொழில்தருநருக்கெதிராக தண்டப் பணம் விதிக்கப்படும்.
  தாமதமான கொடுப்பனவுகளுக்கான மேலதிகக் கட்டணம்
  01 நாள் – 10 நாட்கள் 5%
  10 நாட்கள் – 01 மாதம் 15%
  01 மாதம் – 03 மாதங்கள் 20%
  03 மாதங்கள் – 06 மாதங்கள் 30%
  06 மாதங்கள் – 12 மாதங்கள் 40%
  12 மாதங்களுக்கு மேல் 50%
 • (ஊ)
  கொடுப்பனவு மாதிரி மற்றும் உறுப்பினர் பங்களிப்பு விபரங்களை அனுப்பி வைக்கும் முறை

  கீழே தரப்பட்டுள்ள விருப்பத்தேர்வுகளிலிருந்து உங்களுக்கு ஏற்புடைய கொடுப்பனவு மாதிரியொன்றினைத் தொரிவுசெய்யவும். எனினும் , ஊ.சே. நிதிய உறுப்பினர்கள் தொழில்தருநர்கள் மற்றும் ஊ.சே. நிதியம் என்பனவற்றிற்கு அநேக நன்மைகளை வழங்கும் பொருட்டு ஊ.சே. நிதியம் அதேநேரக் கொடுப்பனவு/ நேரடி பற்று முறைமையினையே விதந்துரைக்கிறது.

  • (ஊ-1) இ-கூற்று முறைமை (இலத்திரனியல் கோவைப்படுத்தல் )
   1. 2012ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க ஊ.சே. நிதிய (திருத்தச்) சட்டத்தின்படி,குறைந்தபட்சம் 50 ஊழியர்களைக் கொண்டுள்ள அனைத்துத் தொழில்தருநர்களும் தமது ஊழியர் சேம நிதியப் பங்களிப்புக்களையயும் உறுப்பினர் விபரங்களையும் மாதாந்த அடிப்படையில் இலத்திரனியல் ஊடகமூடாக சமர்ப்பித்தல் வேண்டும்.
   2. ஊழியர் சேம நிதியத்தினால் வழங்கப்பட்ட பதிவுசெய்தல் படிவத்தினை நேரடியாக ஊ.சே. நிதியத்திற்கு அனுப்புவதன் மூலம் அல்லது அதிகாரமளிக்கப்பட்ட வங்கிகளினூடாக அவர்களின் வெப்தளத்தினூடாக பங்களிப்பு விபரங்களை அனுப்புவதன் மூலம் இ-கூற்று முறைமையின் கீழ் பதிவுசெய்துகொள்ளுதல்.
   3. தேசிய அடையாள அட்டை இலக்கங்களின் கீழ் பதிவுசெய்யப்படுகின்ற ஊழியர்களின் தரவுத்தளத்தினை ஊ.சே. நிதியத்திலிருந்து பெற்றுக்கொள்ளலாம். ஊழியர்கள் தேசிய அடையாள அட்டையின் கீழ் பதிவுசெய்யப்பட்டிருக்கவில்லையாயின் ஆர்ஆர்-6 படிவத்தினை பூர்த்தி செய்து மீள்பதிவிற்காக ஊழியர்களின் விபரங்களை அனுப்பி வைக்கவும்.
    ஆர்ஆர்-6 படிவம் இணைப்பு

   4. பங்களிப்பு விபரங்களை ஊ.சே. நிதியம்/அதிகாரமளிக்கப்பட்ட வங்கிகளின் வெப்தளத்தினூடாக அனுப்புவதற்காக அவர்களினால் வழங்கப்பட்ட படிவங்களிலுள்ளவாறு பின்வரும் விபரக் கோவையினைத் தயாரிக்கவும்.
    • (iv-அ) பங்களிப்பு விபரக் கோவை: இக்கோவையானது ஊழியர்களின் விபரங்களையும் அவர்களது மாதாந்த பங்களிப்புக்களையும் கொண்டிருக்கிறது.
    • (iv-ஆ) கொடுப்பனவு தொகுப்புக் கோவை: இது பங்களிப்பு விபரங்கள் கோவையில் குறித்துரைக்கப்பட்ட காலப்பகுதிக்கான மாதாந்த பங்களிப்பின் தொகுப்பினைக் கொண்டிருக்கிறது.
   5. பங்களிப்பு விபரங்களை அனுப்பி வைப்பதற்கு முன்னர் ஊ.சே. நிதியத்துடன்/அதிகாரமளிக்கப்பட்ட வங்கிகளுடன் உருவாக்கப்பட்ட விபரக் பின்வரும் வழிகளிலொன்றின் மூலம் இ-கூற்றுக்களை (விபரக் கோவை) சமர்ப்பிக்கவும்.
    • (vi-அ) வர்த்தக வங்கிகளின் வெப்தளம்
     வர்த்தக வங்கிகளின் வெப்தளத்தினூடாகப் பங்களிப்பு விபரங்களை அனுப்புதல்/ தற்பொழுது இவ்வசதி பே மாஸ்டர் முறைமையின் மீது கொமர்ஸல் பாங்க் ஒவ் சிலோன் பிஎல்சி இலும் ஐ-நெற் முறைமையின் மீது இலங்கை வங்கியிலும் ஊ.சே.நி நெற் முறைமை மூலம் மக்கள் வங்கியிலும் விஸ்வா கம்பனி முறைமையின் மீது சம்பத் வங்கியிலும் பேபாஸ்ட் முறைமையின் மீது அட்டன் நஸனல் வங்கி பிஎல்சியிலும் என்டிபி ஊ.சே.நி கொடுப்பனவு முறைமையின் மீது தேசிய அபிவிருத்தி வங்கியிலும் கிடைக்கத்தக்கதாக இருக்கிறது.
    • (vi-ஆ) மின்னஞ்சல் முறைமை
     epfc3@cbsl.lk ஊடாக ஊ.சே.நிதியத்திற்குப் பங்களிப்பு விபரங்களை அனுப்புதல்.
   6. பின்வரும் கொடுப்பனவு மாதிரிகளிலொன்றினூடாக ஊ.சே. நிதியத்திற்குப் பங்களிப்புக்களை அனுப்புதல்.
    • (vii-அ) கணனி வழி அதேநேரக் கொடுப்பனவு
     இவ்வசதியானது (vi-அ) இன் கீழ் குறித்துரைக்கப்பட்ட வர்த்தக வங்கியின் வெப்தளத்தினூடாக தமது இ-கூற்றுக்களை சமர்ப்பிக்கும் தொழில்தருநர்களுக்கு கிடைக்கத்தக்கதாகவுள்ளது. உறுப்பினர் விபரக்கோவை, முறைமைக்கு வெற்றிகரமாக தரவேற்றப்பட்டதுடன் நிதியமானது மேலேயயுள்ள வங்கிக் கணக்குகளிலிருந்து ஊ.சே. நிதியக் கணக்கிற்கு நேரடியாக மாற்றல் செய்யப்படுகிறது.
    • (vii-ஆ) நேரடிப் பற்று
     ஊ.சே. நிதியம் நிதிய மாற்றல்களை மேற்கொள்வதனை இயலுமைப்படுத்தும் விதத்தில் தொழில்தருநரின் வங்கியினால் உறுதிப்படுத்தப்பட்ட நேரடிப் பற்று அதிகாரமளித்தல் படிவமொன்றினைச் சமர்ப்பிக்கவும். விபரக்கோவையானது குறிப்பிட்ட மாதத்தின் இறுதி வேலை நாளுக்குக் குறைந்தபட்சம் ஐந்து வேலை நாட்களுக்கு முன்னதாக மின்னஞ்சலூடாக ஊ.சே.நிதியத்தினை வந்தடைதல் வேண்டும் அதற்கமைய தொடர்பான நிதிய மாற்றல் மாதத்தில் இறுதி வேலை நாளன்று மேற்கொள்ளப்படுகின்றது.