கிடைத்தமை பற்றி அறிவித்தல் மற்றும் உறுப்பினர் கூற்றுக்கள்

பங்களிப்புக் கிடைத்தமை மீதான உறுதிப்படுத்தல்
  • இலத்திரனியல் வழிமுறையூடாக பங்களிப்புக்களை அனுப்பிய நிறுவனங்கள் கொடுப்பனவிற்குப் பின்னர் கணனி மயப்படுத்தப்பட்ட முறைமையினால் தயாரிக்கப்பட்ட கொடுப்பனவு கிடைத்தமை பற்றிய அறிவித்தலை உடனடியாகப் பெற்றுக்கொள்ளும்.
  • கொடுப்பனவு கிடைத்தமை பற்றி அனைத்து நிறுவனங்களுக்கும் கொடுப்பனவு வரவு வைக்கப்பட்ட பின்னர் அஞ்சல் மூலம் அறிவிக்கப்படும் அல்லது கொடுப்பனவுகளைக் நேரடியாகக் கையளிப்பவர்களுக்கு கொடுப்பனவு கிடைத்தமை பற்றிய அறிவித்தல் கருமபீடங்களிலேயே உடனடியாக வழங்கப்படும்.
  • மூல பற்றுச்சீட்டு தொலைந்துவிடும் அல்லது பற்றுச்சீட்டு கிடைக்காத சந்தர்ப்பத்தில் பின்வரும் தேவைப்பாடுகளுக்குட்பட்டு தொழில்தருநர்களுக்கு நகல் பற்றுச்சீட்டொன்று வழங்கப்படும்.
    • கொடுப்பனவு விபரங்களுடன் (தொழில்தருநர் இலக்கம், கொடுப்பனவுத் திகதி, காசோலை/ கொடுப்பனவு தொடர்பான இலக்கம், செலுத்தப்பட்ட தொகை ஏற்புடைத்தான காலம்) தொழில்தருநர்களினால் சரியாக உறுதிப்படுத்தப்பட்ட கோரிக்கைக் கடிதமொன்று சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்.
    • பற்றுச்சீட்டுக்களைச் சேகரிப்பதற்கு தொழில்தருநரின் பிரதிநிதியொருவர் நியமிக்கப்பட்டிருக்குமிடத்து நியமனத்தரின் பெயர் மற்றும் தேசிய அடையாள அட்டை உட்பட அத்தகைய பற்றுச்சீட்டுக்களைச் சேகரிப்பதற்கான நியமனக் கடிதமொன்று சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்.
உறுப்பினர் நிலுவைக் கூற்றுக்கள்
  • ஊ.சே.நிதியம் ஒவ்வொரு 6 மாத காலப்பகுதியிலும் ஊழியர்களுக்கு அரையாண்டு கூற்றொன்றினை வழங்குவதனை உறுதிப்படுத்துகிறது.
  • ஊ.சே.நிதியம் தொழில்தருநர்களூடாக ஊழியர்களிடையே உறுப்பினர் நிலுவைகளை விநியோகிப்பதற்கு அவசியமான ஏற்பாடுகளைச் செய்திருக்கிறது. தொழில்தருநர் அவரின்/ அவளின் ஊழியர்களின் கூற்றுக்களை ஊ.சே.நிதியத்திலிருந்து நேரடியாகச் சேகரிக்க வேண்டுமாயின் அத்தகைய தேவை பற்றி ஊ.சே.நிதியத்திற்கு முன்கூட்டியே அறிவிக்கப்படுதல் வேண்டும் என்பதுடன் அத்தகைய கூற்றுக்களைச் சேகரிக்கின்ற பிரதிநிதி/ செய்தி கொண்டுவருபவரினால் உறுதிப்படுத்தல் கடிதமொன்று சமர்ப்பிக்கப்படுவது அவசியமாகும்.
  • பின்வரும் சந்தர்ப்பங்களில் ஊ.சே.நிதிய உறுப்பினர்கள் அவர்களது கணக்குகளில் பெறப்பட்ட பங்களிப்புக்களை அவசர அடிப்படையில் இற்றைப்படுத்துமாறு கோரமுடியும்.
    • 30 சதவீத மீளளிப்பினை எடுப்பனவு செய்வதற்காக விண்ணப்பிப்பதற்கு
    • ஊ.சே.நிதிய நிலுவையை அடிப்படையாகக் கொண்டு வீடமைப்புக் கடனுக்கு விண்ணப்பிப்பதற்கு
    • திருமண அடிப்படையில் பெண்கள் மீளளிப்பிற்காக விண்ணப்பிப்பதற்கு
    • புலம்பெயர்தலின் மீது மீளளிப்புக்களைப் பெற விண்ணப்பிப்பதற்கு

இது தொடர்பில் உறுப்பினர்களின் சார்பில் தொழில்தருநர்கள் பின்வரும் ஆவணங்களைச் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

  • தொழில்தருநரின் எழுத்து மூலமான கோரிக்கை மாதிரிப்படிவம்
  • தொடர்பான “C” படிவங்களின் உறுதிப்படுத்தப்பட்ட உண்மைப் பிரதிகள்

மாதிரி வடிவத்தை பதிவிறக்கவும்படிவம் C ஐ பதிவிறக்கவும்