திருத்தங்கள்

திருத்தங்களை மூன்று வகைகளின் கீழ் வகைப்படுத்த முடியும்.
 • உறுப்பினர்களின் பெயர்களில் திருத்தங்கள்
 • தே.அ.அட்டை இலக்கங்களில் திருத்தங்கள்
 • உறுப்பினர் கணக்குகளில் திருத்தங்கள்
I.  உறுப்பினர்களின் பெயர்களில் திருத்தங்கள்
உறுப்பினர் பெயர்களைத் திருத்துவதற்கான காரணங்கள்
 • உறுப்பினர் ஒருவரின் பெயரின் முதலெழுத்துக்களிலுள்ள வேறுபாடுகள்
 • பெயரின் முதலெழுத்துக்களைச் சேர்த்தல் அல்லது நீக்குதல்
 • முதலெழுத்துக்கள் சரியான ஒழுங்கில் இல்லாமை
 • முதலெழுத்துக்களினால் குறிக்கப்படும் பெயர்களில் முரண்பாடுகள்
 • சரியான பெயருக்காக இன்னொரு உறுப்பினரின் பெயர் தவறாகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றமை
 • பிறப்புச் சான்றிதழில் வழங்கப்பட்டுள்ள பெயருக்குப் பதிலாக புதிய பெயர்களைப் பயன்படுத்துதல்
 • பிறப்புச் சான்றிதழின் 13ஆம் பிரிவின் கீழ் அல்லது திருமணத்தின் பின் உறுப்பினரினால் பெயர் மாற்றப்படுதல்
 • பிழையான பெயர்களை அல்லது புனைப் பெயர்களைப் பயன்படுத்துதல்
 • ஒரே இலக்கத்தின் கீழ் பல உறுப்பினர்களுக்கான பங்களிப்புக்களைச் செலுத்துதல்

 

உறுப்பினர் பெயர்களை மாற்றுதல்

பெயர்களை தேசிய அடையாள அட்டைக்கு இணங்க மாத்திரமே திருத்த முடியுமென்பதுடன் திருத்தத்தின் தன்மையைப் பொறுத்து பின்வரும் நடவடிக்கைகளை எடுத்தல் வேண்டும்:

 • பெயரைத் திருத்துவதற்கான கோரிக்கையை B அட்டை,தேசிய அடையாள அட்டை மற்றும் பிறப்புச் சான்றிதழ் என்பனவற்றின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதிகளுடன் சேர்த்து அனுப்புதல் வேண்டும்.
 • B அட்டையில் காணப்படுகின்ற பெயர் தேசிய அடையாள அட்டையிலிருந்து வேறுபடுமாயின் B அட்டையானது மாவட்ட தொழில் ஆணையாளரின் விதந்துரைப்புடன் திருத்தப்படுதல் வேண்டுமென்பதுடன் மத்திய நிரப்பல் பிரிவு, தொழில் திணைக்களம், 9வது மாடி,நாரயன்பிட்டிய, கொழும்பு 5 இலுள்ள தரவுத்தளமும் திருத்தப்படுதல் வேண்டும்.
 • பழைய அல்லது பிழையான பெயரையும் புதிய அல்லது சரியான பெயரையும் உறுதிப்படுத்துகின்ற விதத்தில் தொழில்தருநரிடமிருந்தான கடிதமொன்றை அடையாளத்தை நிரூபிக்கும் சான்றுடன் பெயரை மாற்றுவதற்கான கோரிக்கையுடன் கண்காணிப்பாளர், ஊ.சே.நிதியம்,மத்திய வங்கி, கொழும்பு 1 இற்கு அனுப்பி வைத்தல் வேண்டும்.
 • பெயரை முழுமையாக மாற்றுகின்றமையைப் பொறுத்தவரையில் உறுப்பினரின் மொத்தப் பங்களிப்பு விபரங்களை வேலை செய்ய ஆரம்பித்ததிலிருந்து முடியும் வரையான காலப்பகுதிக்குரிய விபரங்களுடன் கோரிக்கைக் கடிதமொன்றுடன் சேர்த்து அனுப்புதல் வேண்டும்.
 • திருமணம் காரணமாக ஏற்படும் மாற்றங்கள் அல்லது பிறப்புச் சான்றிதழில் மாற்றங்கள் என்பனவற்றைப் பொறுத்தவரை அனைத்துப் பிறப்பு/திருமணச் சான்றிதழ்களும் மற்றும் சட்ட ஆவணங்களும் தொழில்தருநரினால் உறுதிப்படுத்தப்பட்டு அனுப்பப்படுதல் வேண்டும். முன்னைய தொழில்தருநர் இனிமேல் செயற்படமாட்டார் என்ற சந்தர்ப்பத்தில் உங்கள் பெயரை உறுதிப்படுத்துகின்ற விதத்தில் உங்கள் பிரதேசத்தின் கிராமசேவகரிடமிருந்து பெற்று மாவட்டச் செயலாளரினாலும் துணை தொழில் ஆணையாளர்/தொழில் அலுவலரினாலும் உறுதிப்படுத்தப்பட்ட கடிதமொன்றினை B அட்டையுடன் இணைத்து அனுப்புதல் முக்கியமானதாகும்.
 • முன்னைய தொழில்தருநர் இனிமேல் இயங்கமாட்டார் என்கின்றவிடத்து, உறுப்பினர்கள் தொழில் திணைக்களத்தின் ஆலோசனையினைப் பெற்றுக்கொள்ளுதல் வேண்டும்.
 • மரணமடைந்த உறுப்பினரின் பெயரைத் திருத்துவது தொடர்பில் நன்மைபெறுநர் தொழில் திணைக்களம், “L”பிரிவு, 8ஆவது மாடி, நாராயன்பிட்டிய, கொழும்பு 5 இலிருந்து ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளுதல் வேண்டும்.

திருத்தங்களின் தன்மையினைப் பொறுத்து> அத்திருத்தங்களைத் தொடர்வதற்கு ஊ.சே.நிதியம் மேலும் தகவல்களையும் ஆவணங்களையும் கோரமுடியும் என்பதனைத் தயவுசெய்து கவனத்தில் கொள்ளவும்.

II.  தேசிய அடையாள அட்டை இலக்கங்களைத் திருத்துதல்
தேசிய அடையாள அட்டை இலக்கங்களைத் திருத்துவதற்கான காரணங்கள்
 • தவறான தேசிய அடையாள அட்டை இலக்கம் உறுப்பினருடன் சேர்க்கப்பட்டிருத்தல்
 • புதிய தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டமையின் காரணமாக தேசிய அடையாள அட்டையில் ஏற்பட்ட மாற்றம்
 • சரியான/தவறான பெயருக்காக இன்னொரு உறுப்பினரின் தேசிய அடையாள அட்டை இலக்கம் தவறாகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றமை
 • ஒரு தேசிய அடையாள அட்டை இலக்கம் அநேக உறுப்பினர்களின் பெயர்களுடன் சேர்க்கப்பட்டிருத்தல்

 

தேசிய அடையாள அட்டை இலக்கங்களைத் திருத்துதல்

திருத்தங்களின் தன்மையினைப் பொறுத்து பின்வரும் நடவடிக்கைகளை எடுத்தல் வேண்டும்.

 • திருத்தத்தின் தன்மையைப் பொறுத்து பின்வரும் நடவடிக்கைகள் எடுக்கப்படுதல் வேண்டும்:
 • பெயரைத் திருத்துவதற்கான கோரிக்கையினை B அட்டை, தேசிய அடையாள அட்டை மற்றும் பிறப்புச் சான்றிதழ் என்பனவற்றின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதிகளுடன் சேர்த்து அனுப்பப்படுதல் வேண்டும்.
 • B அட்டையில் காணப்படுகின்ற பெயர் தேசிய அடையாள அட்டையிலிருந்து வேறுபடுமாயின் B அட்டையானது மாவட்ட தொழில் ஆணையாளரின் விதந்துரைப்புடன் திருத்தப்படுதல் வேண்டுமென்பதுடன் மத்திய நிரப்பல் பிரிவு, தொழில் திணைக்களம், 9வது மாடி, நாரயன்பிட்டிய,கொழும்பு 5 இலுள்ள தரவுத்தளத்திலும் திருத்தப்படுதல் வேண்டும்.
 • பழைய அல்லது பிழையான பெயரையும் புதிய அல்லது சரியான பெயரையும் உறுதிப்படுத்துகின்ற விதத்தில் தொழில்தருநரிடமிருந்தான கடிதமொன்று அடையாளத்தை நிரூபிக்கும் சான்றுடன் பெயரை மாற்றுவதற்கான கோரிக்கையுடன் கண்காணிப்பாளர், ஊ.சே.நிதியம், மத்திய வங்கி, கொழும்பு 1 இற்கு அனுப்பி வைத்தல் வேண்டும்.
 • ஒரே அடையாள அட்டை இலக்கம் பல உறுப்பினர்களுடன் சேர்க்கப்பட்டிருக்கும் விடயத்தினைப் பொறுத்தவரை, அனைத்து உறுப்பினர்களினதும் மொத்தப் பங்களிப்பு விபரங்கள் வேலை தொடங்கிய காலத்திலிருந்து முடிவு வரையான காலப்பகுதிக்கு கோரிக்கைக் கடிதத்துடன் அனுப்பப்படுதல் வேண்டும்.
 • புதிய தேசிய அடையாள அட்டை இலக்கம் பழைய தேசிய அடையாள அட்டை இலக்கத்துடன் வேறுபடுமாயின் பழைய மற்றும் புதிய தேசிய அடையாள அட்டை இலக்கங்களை உறுதிப்படுத்துகின்ற கடிதமொன்றினை ஆட்பதிவுத் திணைக்களத்திலிருந்து பெற்று தொழில்தருநரின் கோரிக்கையுடனும் ஏனைய தொடர்பான ஆவணங்களுடனும் சமர்ப்பித்தல் வேண்டும்.
 • முன்னைய தொழில்தருநர் இனிமேல் இயங்கமாட்டார் என்கின்றவிடத்து, உறுப்பினர்கள் தொழில் திணைக்களத்தின் ஆலோசனையினைப் பெற்றுக்கொள்ளுதல் வேண்டும்.
 • மரணமடைந்த உறுப்பினரின் பெயரைத் திருத்துவது தொடர்பில் நன்மைபெறுநர் தொழில் திணைக்களம், “L”பிரிவு, 8ஆவது மாடி, நாராயன்பிட்டிய, கொழும்பு 5 இலிருந்து ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளுதல் வேண்டும்.
 • திருத்தங்களின் தன்மையினைப் பொறுத்து, அத்திருத்தங்களைத் தொடர்வதற்கு ஊ.சே.நிதியம் மேலும் தகவல்களையும் ஆவணங்களையும் கோரமுடியும் என்பதனைத் தயவுசெய்து கவனத்தில் கொள்ளவும்.
உறுப்பினர் கணக்குகளில் திருத்தங்கள்
உறுப்பினர் கணக்குகளில் திருத்தங்களுக்கான காரணங்கள்
 • உறுப்பினர் பங்களிப்புக்களில் வேறுபாடுகள்.
 • பெயர் மற்றும் தேசிய அடையாள அட்டைக்கிடையே காணப்படும் பொருத்தப்பாடின்மையின் காரணமாக உருவாக்கப்பட்ட போலி இலக்கங்களை தீர்த்தல்.
 • ஒரு பெயரின் கீழ் பல உறுப்பினர்களுக்கான பங்களிப்புக்களை அல்லது ஒரு உறுப்பினருக்கான பங்களிப்புக்களை வேறுபட்ட பெயர்களின் கீழ் செலுத்துதல்.
 • மீளளிப்புச் செய்யப்பட்ட கணக்கிற்கு பங்களிப்புக்களின் கொடுப்பனவினை வரவு வைத்தல்.
உறுப்பினர் கணக்குகளில் திருத்தங்கள்

திருத்தத்தின் தன்மையைப் பொறுத்து பின்வரும் நடவடிக்கைகள் எடுக்கப்படுதல் வேண்டும்:

 • தேவையான கணக்குத் திருத்தங்களுக்காக தொழில்தருநரிடமிருந்து கோரிக்கைக் கடிதமொன்று கண்காணிப்பாளர், ஊ.சே. நிதியம், மத்திய வங்கி, கொழும்பு 01 என்ற முகவரிக்கு அனுப்பப்படுதல் வேண்டும். அத்தகைய கோரிக்கையினை தேசிய அடையாள அட்டை, “B” அட்டை மற்றும் பிறப்புச் சான்றிதழ் என்பனவற்றின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதிகளுடன் சேர்த்து அனுப்புதல் வேண்டும்.
 • தேசிய அடையாள அட்டையிலும் “B” அட்டையிலும் காணப்படும் பெயர் ஒரே மாதிரியிருத்தல் வேண்டும். இல்லையெனில் “B” அட்டையினை தேசிய அடையாள அட்டைக்கிணங்க திருத்திக் கொள்வது அவசியமாகும்.
 • இணைக்கப்பட்ட படிவத்திற்கிணங்க, தொடர்பான திருத்தங்களைச் செய்வதற்கு அனைத்து ஊழியர்களுக்குமான வேலை தொடங்கப்பட்டதிலிருந்து வேலை முடிவடையும் வரையிலான காலப்பகுதிக்குரிய முழுமையான மாதாந்தப் பங்களிப்பு விபரங்களைச் சமர்ப்பித்தல் அவசியமாகும்.
 • ஒரே இலக்கத்தின் கீழ் பல உறுப்பினர்களுக்கான பங்களிப்புக்கள் வரவு வைக்கப்பட்டிருக்குமிடத்து அல்லது உறுப்பினரொருவருக்கு வேறுபட்ட இலக்கங்களின் கீழ் பங்களிப்புக்கள் வரவு வைக்கப்பட்டிருக்குமிடத்து முழுமையான பங்களிப்பு விபரங்களும் சரியான உறுப்பினர் இலக்கங்களும் கடிதத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டு “B” அட்டையின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதியுடன் சேர்த்து அனுப்பப்படுதல் வேண்டும்.
 • மீளளிப்புச் செய்யப்பட்ட கணக்கொன்றிற்கு பங்களிப்புக்கள் வரவு வைக்கப்படுமாயின், முதலாவது கொடுப்பனவின் பின்னர், வரவு வைக்கப்பட்ட பங்களிப்புக்களை மாற்றல் செய்வதற்காக புதிய உறுப்பினர் இலக்கம் உருவாக்கப்படுதல் வேண்டும். புதிய இலக்கத்திற்காக “B” அட்டையினை இணைக்கவும்.
 • தொழில்தருநர் இனிமேல் இயங்கவில்லையாயின் கிடைக்கத்தக்க ஏனைய தொடர்பான ஆவணங்களுடன் சேர்த்து துணை தொழில் ஆணையாளர்/ தொழில் அலுவலரிடமிருந்தான ஆலோசனைக் கடிதமொன்றினைச் சமர்ப்பித்தல் வேண்டும்.
 • மரணமடைந்த உறுப்பினரைப் பொறுத்தவரையில் தேசிய அடையாள அட்டை அல்லது “B” அட்டை கிடைக்காதவிடத்து துணை தொழில் ஆணையாளர்/ தொழில் அலுவலர், தொழில் திணைக்களம், “L” பிரிவு – 8ஆவது மாடி, நாரயன்பிட்டி, கொழும்பு 05 இலிருந்து ஆலோசனைக் கடிதமொன்றினைச் சமர்ப்பிப்பது அவசியமாகும்.
 • திருத்தங்களின் தன்மையைப் பொறுத்து, அத்திருத்தங்களைத் தொடர்வதற்கு ஊ.சே.நிதியம் மேலும் தகவல்களையும் ஆவணங்களையும் கோரமுடியும் என்பதனைத் தயவுசெய்து கவனத்தில் கொள்ளவும்.

மொத்த பங்களிப்பு விவரத்திற்கான வடிவமைப்பைப் பதிவிறக்கவும் கோரிக்கை கடிதம்