உறுப்பினர்களாவதற்கு

உறுப்பினராகுவதற்கு

ஊழியரொருவர் அவர் தொழில் பெற்ற முதல் நாளிலிருந்து ஊ.சே. நிதியத்தின் உறுப்பினராவதற்கு உரித்துடையவராவர். ஊழியரை ஊ.சே. நிதியத்தில் சேர்த்துக் கொள்வது தொழில்தருநரின் பொறுப்பாகும். அத்துடன் தொழில்தருநர் அவ்வாறு செய்கிறாரா என்பதனை பார்த்துக் கொள்வது ஊழியரின் பொறுப்பாகும்.

உறுப்பினராகுவதற்கு யார் தகுதியுடையவர்
  • தொழிலின் தன்மையினைக் கவனத்தில் கொள்ளத் தேவையில்லை. அனைத்து ஊழியர்களும் அவர்கள் நிரந்தரமாக, தற்காலிகமாக, அமைய, அல்லது மாற்று நேர அடிப்படையான வேலை நாட்களாக இருப்பினும் அவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுதல் வேண்டும்.
  • செய்யும் வேலையின் அளவு அடிப்படையில், ஒப்பந்த அடிப்படையில், தரகு அடிப்படையில், வேலை செயலாற்றம் அடிப்படையில் அல்லது எந்த முறையிலும் எவையாயினும், தொழில்புரியும் ஊழியர்கள் உறுப்பினராவதற்கு தகுதியுடையவராவர்.
  • தற்காலிக அடிப்படையில் அரசதுறை மற்றும் உள்நாட்டு அதிகார சபைகளில் தொழில்புரியும் ஊழியர்கள்.
  • குடும்ப உறுப்பினர்கள் ஈடுபடுகின்ற நிறுவனங்களைப் பொறுத்தவரையில் பங்களிப்புக்களைச் செலுத்த வேண்டிய அவசியமில்லாத போதும் வெளிஊழியர் ஒருவர் அதே வியாபாரத்திற்கு ஆட்சேர்ப்புச் செய்யப்படுமிடத்து அத்திகதியிலிருந்து அவருக்கு பங்களிப்பினைச் செலுத்துதல் வேண்டும்.
  • பணிப்பாளர்கள் மற்றும் பங்காளர்கள், அவர்கள் வழங்கும் பணிக்காகச் சம்பளம்/படியினைப் பெறுபவர்களாக இருப்பின் அவர்கள்
  • ஓய்வூதியம் பெறுகின்ற ஆளாக இருப்பினும் கூட ஸ்தாபனமொன்றில் பணியாற்றும் ஆட்கள்
  • பாடசாலை நேரத்திற்குப் பின்னர் வேலை செய்யும் 14 வயதிற்கு மேற்பட்ட பாடசாலைச் சிறுவர்கள்
  • இன்னொரு நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் வேளையில் மற்றொரு நிறுவனத்தில் பணிபுரியும் ஆட்கள்
  • குறுகிய காலப்பகுதிக்கு மட்டுப்படுத்தப்பட்ட நேரத்தில் தொழில்புரியும் ஆட்கள்
  • நன்மைகளின் மீளளிப்பினை பெற்றுக்கொண்டதன் பின்னர் அதே நிறுவனத்தில் அல்லது மற்றொரு நிறுவனத்தில் தொழில்புரியும் ஆட்கள்.
  • வெளிநாட்டிலிருந்து வந்து உள்ளுரில் தொழில்புரியும் ஆட்கள்.
ஊ.சே. நிதியத்தில் பதிவுசெய்தல்
  • நீங்கள் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டு 14 நாட்களுக்குள் ஊ.சே. நிதியத்தில் ஒரு உறுப்பினராக நீங்கள் பதிவுசெய்யப்படுதல் வேண்டும். எனவே, இதனை நீங்கள் உங்கள் தொழில்தருநரிடமிருந்து கேட்டுக் கொள்ளுதல் வேண்டும்.
  • ’ஏ’, ‘பீ’ மற்றும் ‘எச்’ சான்றிதழ்களை நிரப்பும் பொழுது உங்கள் அடையாள அட்டையிலுள்ள தகவல்களைப் பயன்படுத்திக் கொள்வதனை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
  • உங்கள் ‘பீ’ அட்டையைப் பெற்றுக் கொண்டதும் அதனைப் பரிசோதிப்பதனை உறுதிப்படுத்திக் கொள்ளவும். அதில் ஏதாவது திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அத்திருத்தங்களை சாத்தியமானளவிற்கு விரைவாக செய்துகொள்ள முயற்சிக்கவும்.
  • உங்கள் ‘பீ’ அட்டையில் குறிக்கப்பட்டுள்ள தகவல்கள் பிழையானவையாயின் உங்கள் தொழில்தருநரினூடாக சாத்தியமானளவிற்கு விரைவாக அவை திருத்தப்படுதல் வேண்டும்.
  • உங்கள் ‘பீ’ அட்டை தொலைந்துவிடாதிருப்பதனை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
  • புதிய கம்பனியொன்றில் இணைவதற்கு நீங்கள் போகும் பொழுது, தேசிய அடையாள அட்டை மற்றும் ஆரம்பப் பங்களிப்பு விபரங்கள் தொடர்பான தகவல்களுடன் ‘ஏ’, ‘பீ’ மற்றும் ‘எச்’ சான்றிதழ்கள் மற்றும் ஆர்ஆர்-6 படிவங்களைப் பூரணப்படுத்துவதற்கு தொழில்தருநருக்கு உங்கள் உதவியை வழங்குங்கள்.

‘ஏ’ படிவ இணைப்பு‘பீ’ படிவ இணைப்பு‘எச்’ படிவ இணைப்பு

மீளளிப்பு நன்மைகளுக்காக நன்மைபெறும் ஒருவரை நியமித்தல்

ஊ.சே. நிதியத்துடன் பதிவுசெய்யப்படும் ஒவ்வொரு நேரத்திலும் நன்மைபெறும் ஒருவரை நியமிக்க முடியும். ‘படிவம் எச்” ஒருவரை நியமிப்பதற்கு அல்லது நியமிப்பவர் நியமிக்கப்படும் ஒவ்வொருவருக்கும் உரித்தான பங்குகள் தொடர்பில் போதுமான விபரங்களைத் தருகின்றவிடத்து பல நன்மைபெறுநர்களை நியமிப்பதற்கு பயன்படுத்த முடியும்.

  • திருமணமாகாத ஆளொருவர் எவரையும் நியமிக்க முடியும்.
  • திருமணமான ஆளொருவர் வாழ்க்கைத் துணைவர், பிள்ளைகள், பெற்றோர், சகோர சகோதரிகள் போன்றோரை நியமிக்கலாம்.

‘எச்’ படிவ இணைப்பு

நன்மைபெறுநர்களை மீளநியமித்தல்

எந்தவொரு நேரத்திலும் தற்பொழுதுள்ள நியமித்தவரை இரத்துச் செய்துவிட்டு வேறு நன்மைபெறுநர்களை மீளநியமிக்க முடியும். ‘படிவம் ஜே” இதற்காகப் பயன்படுத்தப்பட வேண்டியதுடன் சரியாக நிரப்பப்பட்ட படிவத்தினை நீங்கள் வசிக்கும் பிரதேசத்திலுள்ள தொழில் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தல் வேண்டும்.

‘ஜே’ படிவ இணைப்பு

நன்மைபெறுநர்களை இரத்துச்செய்தல்

நியமனங்களை எந்தவொரு நேரத்திலும் இரத்துச் செய்யமுடியும். ‘படிவம் ஐ” இதற்காகப் பயன்படுத்தப்பட வேண்டுமென்பதுடன் சரியாகப் பூர்த்தி செய்யப்பட்ட படிவம் நீங்கள் வசிக்கும் பிரதேசத்திலுள்ள தொழில் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படுதலும் வேண்டும்.

ஐ படிவ இணைப்பு

  • திருமணத்திற்கு முன் செய்யப்பட்ட நியமனம் திருமணம் முடித்ததும் தானாகவே செல்லுபடியற்றதாகிவிடும்.
  • பராயமடையாதோர் நியமிக்கப்படும் பொழுது பாதுகாவலர் ஒருவர் நியமிக்கப்பட்டு நன்மைகள் செலுத்தப்படும். பராயமடையாதவர் முதிர்ச்சியை அடையும் பொழுது பாதுகாவலரின் நியமனம் தானாகவே இரத்துச் செய்யப்பட்டுவிடும்.
  • வாரிசு எவரையும் நியமிக்காமல் உறுப்பினரொருவர் மரணமடையும் பொழுது நன்மைகள் மரபுரிமைச் சொத்துச் சட்டத்தின் கீழ் நீதிமன்றக் கட்டளைக்கிணங்க வழங்கப்படும்.
Leaving Employment
  • In the event of leaving employment, “Form-E” should be filled and submitted to the respective employer to inform to the Labour Office.

E form link

மாதாந்தம் அனுப்பப்படும் பங்களிப்பின் எஞ்சிய தொகை (உறுப்பினர் கணக்குகளில் உள்ளவை)
  • ஒவ்வொரு தனிப்பட்ட உறுப்பினர்களுக்குமான அரையாண்டுக் கூற்றுக்களை இலங்கை மத்திய வங்கியின் ஊ.சே. நிதியத் திணைக்களம் தொழில்தருநர்களுக்கு அனுப்பி வைக்கும்.
  • உங்கள் தொழில்தருநர்களிடமிருந்து பெற்ற அரையாண்டுக் கூற்றுக்களை பாதுகாப்பாக வைத்திருப்பதனை நீங்கள் உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
  • உங்கள் பங்களிப்புக்கள் உங்கள் உறுப்பினர் கணக்குகளில் மாதாந்தம் வரவு வைக்கப்பட்டிருக்கின்றதா என்பதனையிட்டு கவனமாயிருங்கள்.
  • தற்பொழுது பங்களிப்புக்கள் அனுப்பப்படாத செயற்பாடற்ற/ இயங்காத/ தொழிற்படாத/ கவனிக்கப்படாதிருக்கும் கணக்குகளைக் கொண்டிருக்கும் உறுப்பினர்கள் கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் முறையில் அவர்களது நிலுவைக் கூற்றுக்களை பின்வரும் வழியில் பெற்றுக் கொள்ளலாம்.
    1. எழுத்து மூலம்

      கண்காணிப்பாளர்
      ஊ.சே.நிதிய உதவிப்பீடம்,
      ஊ.சே. நிதியத் திணைக்களம்,
      லொயிட்ஸ் கட்டடம்,
      இல.13,
      சேர் பாரன் ஜெயதிலக்க மாவத்தை
      கொழும்பு 01

    2. நேரடியாக வருவதன் மூலம் அல்லது விஜயம் செய்வதன் மூலம்
      • விசாரணைப் பீடம்
        லொயிட்ஸ் கட்டடம்
        இல.13, சேர் பாரன் ஜெயதிலக்க மாவத்தை
        கொழும்பு 01
      • பிரதேசங்களிலும் விரிந்துள்ள/ பரந்துள்ள ஒவ்வொரு தொழில்
        திணைக்களங்களிலுமிருந்து
      • இலங்கை மத்திய வங்கியின் பிரதேச அலுவலகங்களிலிருந்து
    3. இலத்திரனியல் சாதனங்கள் ஊடாக கோரிக்கையை விடுப்பதன் மூலம்

      தேவையான தகவல்கள்: உறுப்பினர் இலக்கம், தொழில்தருநர் இலக்கம், உறுப்பினர் பெயர் போன்றவற்றைச் சரியாகவும் தெளிவாகவும் குறிப்பிடப்படுவதன் மூலம்/ சமர்ப்பிக்கப்படுவதன் மூலம்.
      மின்னஞ்சல் முகவரி: epfhelpdesk@cbsl.lk
      (நிலுவைக் கூற்றுக்களைப் பெற்றுக் கொள்வதற்கு ‘பீ” அட்டையினதும் தேசிய அடையாள அட்டையினதும் மென்பிரதியை அனுப்புவது தேவையானது/அவசியமானது)

    4. குறுஞ்செய்திப் பணிகள் ஊடாக/ மூலமாக இவ்வசதியைப் பெற்றுக் கொள்வதற்குப் பதிவுசெய்தல்.
      • பதிவுசெய்தல் விண்ணப்பத்தினை ஊ.சே. நிதிய வெப்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளமுடியும்.
      • பதிவுசெய்யப்பட்ட உறுப்பினர்கள் அவர்களது ஊ.சே. நிதியக் கணக்கு நிலுவைகளை அவரின் அவளின் செல்லிடத் தொலைபேசிகள்/குறுஞ்செய்தியூடாகப் பெற்றுக் கொள்ளமுடியும்.

குறுஞ்செய்திப் பணிகள் பதிவு படிவ இணைப்பு