FAQs உறுப்பினர்களுக்கு

# வினா விடை
1 ஊ.சே.நிதியத்தில் தொழில்தருநர் எவ்வாறு பதிவுசெய்து கொள்ளுதல் வேண்டும்? முதலாவது ஊழியரை ஆட்சேர்ப்புச் செய்த 14 நாட்களுக்கிடையில் “படிவம்-D” இனை இரட்டைப் பிரதிகளில் நிரப்பி, உறுதிப்படுத்தி பதிவு அஞ்சல் மூலம் அண்மையிலுள்ள தொழில் அலுவலகத்திற்கு அல்லது தொழில் ஆணையாளருக்கு நேரடியாக அனுப்பி வைத்தல் வேண்டும். அதன் பின்னர் பதிவு இலக்கமொன்று வழங்கப்படும். இது, நிருவாக மாவட்டத்தினைக் குறிக்கும் விதத்தில் இரண்டு ஆங்கில நெடுங்கணக்கு எழுத்துடன் ஆரம்பிக்கும்.
2 ஊழியரினாலும் தொழில்தருநரினாலும் செய்யப்படும் ஊழியர் சேமலாப நிதியப் பங்களிப்பு என்ன? ஊழியர் பங்களிப்பு: மொத்த மாதாந்த வருவாயில் 8 சதவீதம் (ஊழியரின் சம்பளம்/ கூலியிலிருந்து கழிக்கப்பட வேண்டியது)
தொழில்தருநர் பங்களிப்பு: ஊழியரின் மொத்த மாதாந்த வருமானத்தில் 12 சதவீதத்திற்குச் சமமான தொகை (தொழில்தருநரினால் மொத்தமாகச் செலுத்தப்பட வேண்டியது).
ஊழியரொருவருக்கான மொத்தப் பங்களிப்பு: ஊழியரின் மொத்த மாதாந்த வருவாயில் 20 சதவீதம்.;
3 மொத்த வருவாய்களைக் கணக்கிடும் போது பரிசீலனையில் கொள்ளப்பட வேண்டிய கூறுகள் யாவை? • சம்பளம், கூலிகள் அல்லது கட்டணங்கள்• வாழ்க்கைச் செலவுப் படிகள், விசேட வாழ்க்கைப் படிகள் மற்றும் ஏனைய அதையொத்த படிகள்

• விடுமுறை நாட்கள் தொடர்பான கொடுப்பனவு

• ஊழியருக்கு தொழில்தருநரினால் வழங்கப்படுகின்ற சமைத்த அல்லது சமைக்காத உணவின் காசுப் பெறுமதி (அத்தகைய பெறுமதி இறுதியாக தொழில் ஆணையாளரினால் தீர்மானிக்கப்படுகிறது)

• உணவுப் படிகள்

• குறித்துரைக்கப்படக்கூடிய வேறு ஏதேனும் வகையான ஊதியங்கள்

• கழிவுகள் (தரகுகள்) துண்டு அடிப்படையிலான கொடுப்பனவுகள் மற்றும் ஒப்பந்த அடிப்படையிலான கொடுப்பனவுகள்

4 மொத்த வருவாய்களைக் கணிக்கும் போது நீக்கப்பட வேண்டிய கூறுகள் யாவை? • மேலதிக நேரக் கொடுப்பனவுகள்
• மீளச் செலுத்தப்பட வேண்டிய பயணச் செலவுகள்
• ஊக்குவிப்புக் கொடுப்பனவுகள்/ போனஸ் கொடுப்பனவு
5 மாதாந்த ஊழியர் சேமலாப நிதியப் பங்களிப்புக்கள் இலங்கை மத்திய வங்கியின் ஊ.சே.நிதியத் திணைக்களத்திற்கு அனுப்பப்பட வேண்டிய இறுதித் திகதி யாது? ஒவ்வொரு மாதத்திற்குமான ஊ.சே.நிதியப் பங்களிப்பு அடுத்துவரும் மாதத்தின் இறுதி வேலை நாளன்றோ அல்லது அதற்கு முன்னதாகவோ அனுப்பப்படல் வேண்டும். இல்லையெனில் தாமதத்திற்கேற்ப தொழில்தருநருக்கெதிராக மேலதிகக் கட்டணங்கள் விதிக்கப்படும்.
6 ஊழியர் சேமலாப நிதியப் பங்களிப்பினை ஊ.சே.நிதியத் திணைக்களத்திற்கு அனுப்பி வைப்பதற்குப் பொறுப்பானவர் யார்? நிறுவனத்தில் தொழில்புரியும் ஒவ்வொரு ஊழியர்களுக்குமான ஊ.சே.நிதியப் பங்களிப்புக்களைச் செலுத்துவது தொழில்தருநரின் பொறுப்பாகும். பங்களிப்புக்களைச் செலுத்துவதற்கு ஊழியர்கள் விரும்பவில்லை எனக் காரணம் காட்டுவதன் மூலம் இப்பொறுப்பிலிருந்து தொழில்தருநர்களுக்கு மன்னிப்பளிக்கப்படமாட்டாது.
7 ஊ.சே.நிதியப் பங்களிப்புக்களைச் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ள நிறுவனங்கள் யாவை? இளம் குற்றவாளிகள், ஆதரவற்றோர், காது கேளாதவர்கள் மற்றும் கண் தெரியாதவர்களுக்கு பயிற்சிகளை வழங்குகின்ற சமூகப் பணி நிறுவனங்களாக இருக்குமிடத்து;
10 உறுப்பினர்களுக்குக் குறைவானவர்களுக்கு தொழில் வழங்குகின்ற அறக்கொடை அமைப்புக்கள்
குடும்ப உறுப்பினர்கள் இப்பொழுது வரை ஊ.சே.நிதியத்திற்குப் பங்களிப்புக்களை செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படவில்லை
8 ஊ.சே.நிதியப் பங்களிப்புக்களைக் குறைவாகச் செலுத்துவதற்கு அல்லது செலுத்தாமல் விடுவதற்கெதிரான சட்ட நடவடிக்கைகள் யாவை? ஊழியர் எழுத்து மூலமான முறைப்பாடொன்றினை தொழில் ஆணையாளருக்குச் செய்வதற்கான உரிமையினை தன்னகத்தே கொண்டுள்ளார். முறைப்பாடு கிடைத்ததும் சரியான விசாரணையின் பின்னர் இது பற்றி தொழில்தருநருக்கு அறிவிக்கப்பட்டு சேரவேண்டிய தொகையினைச் செலுத்துமாறு எச்சரிக்கப்படுவார். தொழில்தருநர் அதற்குப் பூரணமாக ஒத்துழைத்து, மூன்று எச்சரிக்கைகளுக்குப் பின்னரும் பங்களிக்கத் தவறுவாராயின், ஊழியரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக தொழில்தருநருக்கெதிராக சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு தொழில் திணைக்களம் நிர்ப்பந்திக்கப்படும்.
9 பங்களிப்புக்களைச் செலுத்தாமைக்கான விளைவுகள் யாவை? அரசிற்கான கடனொன்றாக அத்தகைய தொகைகளைப் பரிசீலனையில் கொள்வதன் மூலம் சேரவேண்டிய தொகை அறவிடப்படும்.
10 அனைத்து நிறுவனங்களும் ஊழியர் சேமலாப நிதியினைச் செலுத்த வேண்டுமா? 1958ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க ஊ.சே.நிதியச் சட்டத்தின் 8ஆம் பிரிவின் கீழ் குறித்துரைக்கப்பட்டவாறான தொழில்நிலையின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ளவை அனைத்தும் பங்களிப்புக்களைச் செலுத்த பொறுப்புடையனவாகும்.
11 இ-முறையில் சமர்ப்பிப்பதற்கு எவ்வாறு பதிவுசெய்வது? (இ-திரட்டுக்களைச் சமர்ப்பித்தல்) ஊ.சே.நிதியத்தினால் வழங்கப்பட்ட பதிவுப் படிவத்தினை ஊ.சே.நிதியத்திற்கு நேரடியாக, அல்லது ஊழியர் சேமலாப நிதிய வாடிக்கையாளர்களுக்காக ஊ.சே. நிதியப் பங்களிப்புக்களின் கொடுப்பனவிற்கும் அவர்களின் இணையவழி வங்கித்தொழில் முறைமைகளூடாகப் பங்களிப்பு விபரங்களைச் சமர்ப்பிப்பதற்கும் வசதியளிக்கின்ற இலங்கையிலுள்ள உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளூடாகச் சமர்ப்பிக்கலாம்.
12 அனைத்து வர்த்தக வங்கிகளும் அவற்றின் வாடிக்கையாளர்களுக்காக ஊ.சே.நிதிய இணையவழிக் கொடுப்பனவு வசதிகளை வழங்குகின்றனவா? 08 உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் மட்டுமே அவற்றின் வாடிக்கையாளர்களுக்காக ஊ.சே.நிதிய இணையவழிக் கொடுப்பனவு வசதிகளை வழங்குகின்றன (கொமர்ஷல் வங்கி, இலங்கை வங்கி, அட்டன் நஷனல் வங்கி, சம்பத் வங்கி, மக்கள் வங்கி, என்டிபீ வங்கி, செலான் வங்கி மற்றும் டிஎவ்சிசி வங்கி)
13 எந்தவொரு தொழில்தருநரினாலும் இணையவழிக் கொடுப்பனவினைச் செய்யமுடியுமா? ஆம். எந்தவொரு தொழல்தருநரும் அவரது நிறுவனத்திலுள்ள ஊழியர்களின் எண்ணிக்கையினைக் கருத்திற்கொள்ளாது இணையவழிக் கொடுப்பனவுகளைச் செய்யமுடியும். எனினும், குறைந்தபட்சம் ஐம்பதிற்கு மேற்பட்ட ஊழியர்களைத் தமது நிறுவனத்தில் கொண்டுள்ள தொழில்தருநர்கள் இ-திரட்டுக்களைச் சமர்ப்பிப்பது கட்டாயமானதாகும்.
14 யார் ஊ.சே.நிதியக் கொடுப்பனவுகளை நேரடி பற்றுக் கொடுப்பனவுத் தேர்வு மூலம் செலுத்த முடியும்? ஊ.சே.நிதியம், குறைந்தபட்சம்தமதுநிறுவனத்தில்ஐம்பதுஊழியர்களைக்கொண்டுள்ள தொழில்தருநர்களுக்கு மாத்திரம் நேரடிப் பற்று முறைத் தேர்விற்கு வசதியளிக்கின்றது.
15 ஊ.சே.நிதிய இணையவழிக் கொடுப்பனவுச் செய்முறை தொடர்பில் கூடுதலான தகவல்களை நாம் எவ்வாறு பெற்றுக்கொள்ள முடியும்? இவ்வெப்தளத்தின் “பங்களிப்புக்களை அனுப்புதல்” <பிரயோகிக்கத்தக்கது> என்ற பிரிவினைத் தயவுசெய்து பார்க்கவும் அல்லது epfc3@cbsl.lk என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புவதன் மூலம் அல்லது எந்தவொரு வேலை நாளிலும் மு.ப. 8.00 மணியிலிருந்து பி.ப. 4.15 மணிவரை கீழேயுள்ள தொலைபேசி இலக்கங்களில் தொடர்பு கொள்ளுவதன் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

+ 94 – 112477475, 2477981, 2477927, 2477971, 2477987, 2477990, 2477999.

16 தாமதமான பங்களிப்புக் கொடுப்பனவுகள் மீதான மேலதிகக் கட்டணங்களை எவ்வாறு கணித்துக் கொள்வது? பின்வருவனவற்றின் மீது மேலதிகக் கட்டணம் செலுத்தப்படல் வேண்டும்:

• பங்களிப்புக்களைத் தாமதமாகச் சமர்ப்பித்தல்
• குறைவான கொடுப்பனவுகளைச் செய்தல்
(செலுத்தப்பட்ட தொகை கணிக்கப்பட்ட பங்களிப்பிலும் பார்க்கக் குறைவானதாக இருக்கும் போது, மேலதிகக் கட்டணமானது, குறைக் கொடுப்பனவிலிருந்து முழுக் கொடுப்பனவைச் செய்த நாட்களின் எண்ணிக்கைக்கிணங்க அதிகரிக்கப்படும்.)
நிலுவையிலுள்ள கொடுப்பனவுகள் மற்றும் குறைக் கொடுப்பனவுகளுக்கான மேலதிகக் கட்டணம் வருமாறு:

 

தாமதம் மேலதிகக் கட்டணம்

1 நாளிலிருந்து 10 நாட்கள் வரை 5%

10 நாட்களிலிருந்து 1 மாதம் வரை 15%

1 மாதத்திலிருந்து 3 மாதங்கள் வரை 20%

3 மாதங்களிலிருந்து 6 மாதங்கள் வரை 30%

6 மாதங்களிலிருந்து 12 மாதங்கள் வரை 40%

12 மாதங்களுக்கு மேல் 50%

தொழில் திணைக்களத்தின் அறிவித்தலுக்கிணங்க, மேலதிகக் கட்டணத்தினை தாமதப் பங்களிப்புடன் அல்லது ஊழியர் சேமலாப நிதியக் கொடுப்பனவுகளின் தாமத சமர்ப்பிப்புக்களின் பின்னர் செலுத்தமுடியும்.

17 தொழில்தருநர்கள் தாமதப் பங்களிப்புக்களை இலங்கை மத்திய வங்கியின் ஊ.சே.நிதியத் திணைக்களத்திற்குச் நேரடியாகச் செலுத்த முடியுமா? தொழில்தருநர்கள், தொழில் திணைக்களத்தினால் விதிக்கப்பட்ட மேலதிகக் கட்டணங்களுடன் சேர்த்து தமது தாமத விதிப்புக்களை இலங்கை மத்திய வங்கிக்கு நேரடியாகச் செலுத்துவதற்குப் பொறுப்புடையவர்களாவர்.
18 தொழில் திணைக்களத்தினால் எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கைகளின் விளைவாகச் செலுத்தப்பட வேண்டிய கொடுப்பனவுகளை தொழில்தருநர் செலுத்து முடியுமா? தாமதமான பங்களிப்புக்கள் மற்றும் சிவப்பு அறிவித்தல்/ அறிவித்தல்கள்/ தொழில் திணைக்களத்தினால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் மூலம் விதிக்கப்பட்ட மேலதிகக் கட்டணங்கள் மற்றும் நீதிமன்றத்தின் தீர்மானங்களின் பெறுபேறாகக் கணிக்கப்பட்ட பங்களிப்புக்கள் மற்றும் மேலதிகக் கட்டணங்கள் தொழில் திணைக்களத்தினூடாகச் செலுத்தப்படல் வேண்டும்.
19 படிவம் “C” இனை நாம் எவ்வாறு பெற்றுக்கொள்ள முடியும்? எத்தனை பிரதிகள் தயாரிக்கப்படுதல் வேண்டும்? இலங்கை மத்திய வங்கியின் ஊ.சே.நிதியத் திணைக்களம், உறுப்பினர் விபரங்கள் அச்சிடப்பட்ட படிவம் “C” இனை 50 ஊழியர்களுக்கும் குறைவாகச் செயற்படுகின்ற தொழில்தருநர்களுக்கு மாதாந்த அடிப்படையில் அனுப்பி வைக்கும்.

தொழில்தருநர்கள் படிவம் “C” இன் வெற்றுப் பிரதியை அண்மையிலுள்ள தொழில் திணைக்களத்திலிருந்து கட்டணமெதுவுமின்றிப் பெற்றுக்கொள்ளலாம் அல்லது www.epf.lk இலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் (முன்கூட்டியே அச்சிடப்பட்ட படிவம் “C” கிடைக்காத போது).

மூன்று பிரதிகள் தயாரிக்கப்படுதல் வேண்டும். படிவம் “C” இன் மூலப்பிரதி இலங்கை மத்திய வங்கியின் ஊ.சே.நிதியத் திணைக்களத்திற்குச் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும். இரண்டாவது பிரதி அண்மையிலுள்ள தொழில் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படல் வேண்டும். மூன்றாவது பிரதியை எதிர்கால உசாவுகைகளுக்காக தொழில்தருநர் வைத்திருத்தல் வேண்டும்.

20 ஊ.சே.நிதியக் கொடுப்பனவுகளைச் செலுத்துகின்ற மற்றும் பங்களிப்பு விபரங்களைக் கைகளினால் அனுப்புகின்ற (படிவம் “C”இனைப் பயன்படுத்தி) முறைகள் யாவை? 1) காசு அல்லது காசோலை மூலமான ஊ.சே.நிதியப் பங்களிப்புக்கள் மக்கள் வங்கியின் எல்லாக் கிளைகளிலும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.

· தொடர்பு இலக்கத்தினை உள்ளடக்கியுள்ள படிவம் “C” இனைச் சரியான முறையில் நிரப்பிய பின்னர் தொழில்தருநர் ஊ.சே.நிதியக் காசோலை/ காசு வைப்புத் துண்டுடன் சேர்த்து மக்கள் வங்கிக் கிளையில் சமர்ப்பித்தல் வேண்டும்.

· படிவம் “C” இல் தொழில்தருநரின் முகவரிக்குக் கீழே அச்சிடப்பட்டிருக்கும் தொடர்பு இலக்கத்தினை ஊ.சே.நிதியக் காசோலை/ காசு வைப்புத் துண்டிலுள்ள குறிப்பிட்ட இடத்தில் எழுதுதல் வேண்டும்.

2) காசோலைகள் மற்றும் வங்கி வரைவுகள் ஊ.சே.நிதியத் திணைக்களத்தின் கண்காணிப்பாளரின் சார்பில் வரையப்படுதல் வேண்டும்.

3) காசுக் கொடுப்பனவுகளை இலங்கை வங்கியின் தப்ரபோன் கிளையில் செலுத்த முடியும்.

4) காசுக் கட்டளைகள் (கொடுப்பனவு அலுவலகம், கொழும்பு எனக் குறிப்பிடப்படுதல் வேண்டும்)

[மூலப்படிவம் “C” இனைக் கொடுப்பனவுச் சாதனங்களுடன் சேர்த்து (காசோலை/ காசுக் கட்டளை/ வங்கி வரைவு/ இலங்கை வங்கியின் காசு வைப்புத் துண்டு) ஊ.சே.நிதியக் கண்காணிப்பாளர், லொயிட்ஸ் கட்டடம், இல.13, சேர் பாரன் ஜெயதிலக்க மாவத்தை, கொழும்பு 1 இற்கு அனுப்பி வைக்கவும் அல்லது லொயிட்ஸ் கட்டடத்திலுள்ள ஊ.சே.நிதியத் திணைக்களத்தின் ஆவணச் சேகரிப்புப் பீடத்தில் கையளிக்கவும்]

21 முன்கூட்டியே அச்சிடப்பட்ட படிவம் “C” கிடைக்கவில்லையாயின் மக்கள் வங்கியினூடாக எவ்வாறு ஊ.சே.நிதியப் பங்களிப்புக்களைச் செலுத்துவது? படிவம் “C” இன் பிரதியை www.epf.lk இலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளவும். தொடர்பு இலக்கத்தினைப் பெற்றுக்கொள்வதற்குப் பின்வரும் இலக்கங்களில் விசாரிக்கவும்.

0112206637, 0112206638, 0112206639, 0112206659, 0112206661

22 ஊ.சே.நிதியத் திணைக்களத்திற்கு ஊ.சே.நிதியப் பங்களிப்புக்களை அனுப்புவதற்கு யார் பொறுப்பு? ஊழியரின் வருவாயிலிருந்து 20 சதவீதப் பங்களிப்பினை மாதாந்தம் ஊ.சே.நிதியத்திற்கு அனுப்பி வைப்பது தொழில்தருநரின் பொறுப்பாகும் (ஊழியர் – 8%, தொழில்தருநர் – 12%).
23 தொழில்தருநர்கள் முன்கூட்டியே அச்சிடப்பட்ட படிவம் “C” இனைப் பெறும் வரை மாதாந்த ஊ.சே. நிதியப் பணவனுப்பலை அனுப்புவதற்குக் காத்திருக்க வேண்டுமா? இல்லை. முன்கூட்டியே அச்சிடப்பட்ட படிவம் “C” கிடைக்காத போது, படிவம் “C” இன் பிரதியொன்றினை (கட்டணமெதுவுமின்றி) அண்மையிலுள்ள தொழில் திணைக்களத்திடமிருந்து பெற்றுக்கொள்ள முடியும் அல்லது www.epf.lk இலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
24 புதிய ஊழியர்களை எவ்வாறு சேர்ப்பது மற்றும் ஓய்வுபெற்ற/இராஜினாமாச் செய்த உறுப்பினர்களை எவ்வாறு செயற்படாதவர்களாக்குவது? புதிய உறுப்பினர்கள் ஆட்சேகரிப்புச் செய்யப்படும் போது ஊழியர்களின் விபரங்கள் குறிப்பிட்ட மாதத்தின் படிவம் “C” இல் உள்ளடக்கப்படுதல் வேண்டும். உறுப்பினர்களின் விபரங்கள், புதிய உறுப்பினரின் தேசிய அடையாள அட்டையிலுள்ளவாறு சரியாக நிரப்பப்படுதல் வேண்டும்.
ஏற்கனவேயுள்ள ஊழியர்கள் ஓய்வுபெறும் போது/ விலகும் போது தொழில்தருநர், விலகிய/ இராஜினாமா செய்த/ ஓய்வுபெற்ற ஊழியர்களின் பட்டியலுடன் சேர்த்துக் கடிதமொன்றின் மூலம் ஊ.சே.நிதியத்திற்கு அறிவித்தல் வேண்டும்.
25 ஊ.சே.நிதியத்திற்கு முதலாவது பங்களிப்பினைச் செலுத்துவதற்கு முன்னர் ஊழியர்களின் “B” அட்டையினை கம்பனி பதிவுசெய்தல் வேண்டுமா? ஆம், ஊழியர்களுக்கான ஊ.சே.நிதிய இலக்கத்தினை எண்ணியல் ஒழுங்கில் ஒதுக்கி ஆட்சேர்ப்புச் செய்யப்பட்ட 14 நாட்களுக்குள் ஊ.சே.நிதியத்தில் ஒரு உறுப்பினராகப் பதிவுசெய்தல் வேண்டும்.
26 கடந்த காலத்தில் அல்லது தற்பொழுது உறுப்பினரொருவருக்கு ஒதுக்கிய இலக்கத்தினை மற்றொரு உறுப்பினருக்கு ஒதுக்குவது சாத்தியமானதா? கடந்த காலத்திலோ அல்லது தற்பொழுதோ ஒரு உறுப்பினருக்கு ஏற்கனவே ஒதுக்கிய இலக்கத்தினை மற்றொரு உறுப்பினருக்கு ஒதுக்கக்கூடாது.
27 எப்பொழுது “B” அட்டையினை ஊழியர்களிடம் கையளித்தல் வேண்டும்? ஊழியரொருவர் தொழிலிருந்து விலகும் போது/ இராஜினாமச் செய்யும் போது/ ஓய்வுபெறும் போது கையளித்தல் வேண்டும். எனினும், “B” அட்டையிலுள்ள தகவல்களை ஊழியர்களுடன் சரிபார்த்துக் கொள்ளுதல் வேண்டும். ஏதேனும் முரண்பாடுகள் காணப்படுமிடத்து அதனைச் சரிசெய்வதற்கு உடனடியாக நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
28 மத்திய வங்கியின் ஊ.சே.நிதிய தரவுத் தளத்திலும் தொழில் திணைக்களத் தரவுத் தளத்திலுமுள்ள ஊழியர்களின் பெயர்களிலும் தேசிய அடையாள அட்டையிலுமுள்ள குறைபாடுகளைத் திருத்துவதற்கு நடவடிக்கை எடுப்பது தொழில்தருநரின் பொறுப்பா? ஆம். மத்திய வங்கியின் தரவுத் தளத்திலும் தொழில் திணைக்களத்திலுமுள்ள ஊழியர்களின் பெயர்/ தே.அ.அட்டை இலக்கம் என்பனவற்றைத் திருத்துவதற்கு சரியான விபரங்களை வழங்கி ஊழியரின் தே.அ.அட்டை “B” அட்டை மற்றும் பிறப்புச் சான்றிதழின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதிகளுடன் சேர்த்து கோரிக்கையொன்றை செய்வது தொழில்தருநரின் பொறுப்பாகும்.
29 மத்திய வங்கியின் தரவுத் தளத்தில் தொழில்தருநரின் பதிவுகளை எவ்வாறு இற்றைப்படுத்துவது? புதிய தொழில்நிலைகளைப் பதிவுசெய்தல் – தொழில் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட பதிவுச் சான்றிதழின் பிரதி அனுப்பி வைக்கப்படல் வேண்டும்.

பின்வருவனவற்றில் மாற்றங்களைச் செய்வதற்கு;

• தொழில்தருநரின் பெயர்கள் – தொழில் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட திருத்தப்பட்ட பதிவுச் சான்றிதழின் பிரதி அனுப்பி வைக்கப்படுதல் வேண்டும்.

• நிரந்தர முகவரி – தொழில் ஆணையாளரினால் உறுதிப்படுத்தி அனுப்பி வைக்கப்படுதல் வேண்டும்.

• அஞ்சல் முகவரி – தொழில்தருநரின் எழுத்து மூலமான கோரிக்கை அனுப்பி வைக்கப்படுதல் வேண்டும்.

• தொழில்தருநரின் நிலை (தொழில்படுகின்றமை/ தொழிற்படாமை) தொழில்தருநரிடமிருந்தான எழுத்து மூலமான கோரிக்கை அனுப்பி வைக்கப்படல் வேண்டும்.

30 எத்தகைய சூழ்நிலைகளில் மேலதிகக் கட்டணங்கள் விதிக்கப்படுகிறது? பூரணமற்ற விபரங்களைச் சமர்ப்பிப்பதற்காக மொத்தக் கொடுப்பனவின் மீது 2 சதவீத மேலதிகக் கட்டணம் விதிக்கப்படும் (படிவம் “C” உரைக் கோப்பு) உறுப்பினர் விபரங்களில் அல்லது கொடுப்பனவில் குறைபாடுகள் இருக்குமிடத்து உறுப்பினர் கணக்குகள் இற்றைப்படுத்தப்படாது என்பதுடன் அது பற்றி தொழில்தருநர்களுக்கு அறிவிக்கப்படும்.

படிவம் “C” அல்லது உரைக் கோப்புக்கள் இல்லாமல் பங்களிப்புக்கள் அனுப்பப்படின் உறுப்பினர் கணக்குகள் பதிவுசெய்யப்படாது என்பதுடன் சிக்கல்களுக்கும் தண்டங்களுக்கும் வழிவகுக்கும்.

31 மத்திய வங்கியினால் அனுப்பப்பட்ட மாதாந்த முன்கூட்டியே அச்சிடப்பட்ட படிவம் “C” இலுள்ள பெயர்/ தேசிய அடையாள அட்டையில் குறைபாடுகள் அடையாளம் காணப்படும் போது அதனை எவ்வாறு எதிர்கொள்ளுதல் வேண்டும்? ஊழியர் கணக்குகளைத் திருத்துவதற்கும் அதன்படி படிவம் “C” இலுள்ள உறுப்பினர் விபரங்களை இற்றைப்படுத்துவதற்கும் “உண்மையான பிரதி” என தொழில்தருநரினால் உறுதிப்படுத்தப்பட்ட தொடர்பான உறுப்பினரின் தேசிய அடையாள அட்டை, “B” அட்டை மற்றும் பிறப்புச் சான்றிதழின் பிரதிகளுடன் சேர்த்து கோரிக்கைக் கடிதமொன்றினை அனுப்புதல் வேண்டும்.

குறிப்பிட்ட குறைபாடுகள் ஊழியரின் பெயர்/ தேசிய அடையாள அட்டையுடன் தொடர்பானதாக இருக்குமிடத்து, ஊழியர்களின் பிழையான பெயர்/ தேசிய அடையாள அட்டையுடன் கூடிய படிவம் “C” தொழில் திணைக்களத்தினூடாக பெறப்பட்டிருப்பதனால் (ஒன்றுசேர்ந்த தாமதக் கொடுப்பனவு அல்லது சட்ட நடவடிக்கையின் பெறுபேறாகச் செய்யப்பட்ட கொடுப்பனவாக இருக்கும் சந்தர்ப்பத்தில்) திருத்தத்திற்கான கோரிக்கை தொழில்தருநர் மற்றும் தொடர்பான தொழில் திணைக்களம் இரண்டினூடாகவும் பெறப்படுதல் வேண்டும்.

32 ஊழியரின் பெயர்/ தே.அ.அட்டையில் காணப்படும் பொருத்தப்பாடின்மையினைச் சரிபார்ப்பதற்கான கடிதத்தினை தொழில்தருநர் பெறும் போது தொழில்தருநர் என்ன செய்ய வேண்டும்? தயவுசெய்து, மத்திய வங்கியின் தரவுத் தளத்தில் அல்லது குறிப்பிட்ட படிவம் “C” இலுள்ள உறுப்பினரின் தரவுகள் சரியானவையா என்பதனை பரிசோதிக்கவும். மத்திய வங்கியிலுள்ள தரவுகள் சரியானவையாயின் படிவம் “C” இன் துல்லியத்தன்மையினை உறுதிப்படுத்தி அதன்படி ஊ.சே.நிதிக்கு கடிதமொன்றினை அனுப்பவும். மத்திய வங்கியின் தரவுகளில் வேறுபாடுகள் காணப்படுமாயின் தொடர்பான உறுப்பினரின் தே.அ.அட்டை, “B” அட்டை மற்றும் பிறப்புச் சான்றிதழ் என்பனவற்றின் பிரதிகளை “உண்மையான பிரதி” என தொழில்தருநர் உறுதிப்படுத்தி ஊழியரின் விபரங்களையும் உறுப்பினர் கணக்குகளையும் படிவம் “C” இலுள்ளவாறு திருத்துவதற்கான கோரிக்கைக் கடிதத்துடன் சேர்த்து அனுப்புதல் வேண்டும்.
33 குறைக் கொடுப்பனவு/ மிகைக் கொடுப்பனவு தொடர்பான கடிதமொன்றினை தொழில்தருநர்கள் பெறும்பொழுது அவர்கள் என்ன செய்ய வேண்டும்? துல்லியமான படிவம் “C” இனை வழங்குவதற்கு தொழில்தருநர்கள் பொறுப்புடையவர்களாவர் என்பதுடன், தொங்கல் கணக்கிலுள்ள பங்களிப்புக்கள் தனிப்பட்ட உறுப்பினரின் கணக்குகளுக்கு இற்றைப்படுத்தும் செய்முறையினை விரைவுபடுத்தும் பொருட்டு, ஏதேனும் குறைபாடுகள் இருக்குமாயின் 2 சதவீத மேலதிகக் கட்டணம் விதிக்கப்படும்.

மிகைக் கொடுப்பனவு காணப்படுமாயின் தொழில்தருநர் அடுத்துவரும் மாதத்தின் ஊ.சே.நிதியப் பங்களிப்பிலிருந்து அதனைக் கழித்துக் கொள்ளலாம் (அடுத்த கொடுப்பனவுடன் காசோலை இலக்கம் மற்றும் மிகைக் கொடுப்பனவு விபரங்களை வழங்குதல் வேண்டும்) அல்லது கொடுப்பனவுத் திகதியிலிருந்து ஓராண்டிற்குள் மீளளிப்பிற்கான கோரிக்கையொன்றினை அனுப்பி வைத்தல் வேண்டும்.

34 ஊ.சே. நிதியக் கொடுப்பனவிற்கான உறுதிப்படுத்தலை எவ்வாறு பெற்றுக்கொள்வது? காலக்கிரமத்தில் பங்களிப்புக்கள் பெறப்பட்டமைக்கான பற்றுச்சீட்டுக்கள் தொழில்தருநர்களுக்கு ஊ.சே.நிதியத்தினால் அனுப்பி வைக்கப்படும்.
35 பற்றுச்சீட்டின் பிரதியை எவ்வாறு பெறுவது? சரியாக உறுதிப்படுத்தப்பட்ட கோரிக்கைக் கடிதத்தினை கொடுப்பனவு விபரங்களுடன் (தொழில்தருநர் இலக்கம், கொடுப்பனவுத் திகதி, காசோலை/ கொடுப்பனவு தொடர்பு இலக்கம், செலுத்தப்பட்ட தொகை, ஏற்புடைத்தான காலம்) தொழில்தருநர் சமர்ப்பித்தல் வேண்டும்.

பற்றுச்சீட்டுக்களைச் சேகரிப்பதற்கு தொழில்தருநரின் பிரதிநிதியொருவர் நியமிக்கப்பட்டிருக்குமிடத்து, நியமனத்தரின் பெயர் மற்றும் தேசிய அடையாள அட்டை இலக்கம் என்பன உட்பட அத்தகைய பற்றுச்சீட்டுக்களைச் சேகரிப்பதற்கான நியமனக் கடிதம் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்.

36 தொழில்தருநர் அரையாண்டு உறுப்பினர் கூற்றுக்களை ஊழியர்களிடையே விநியோகித்தல் வேண்டுமா? ஆம். தொழில்தருநர்கள், உறுப்பினர்களின் அரையாண்டுக் கணக்குக் கூற்றுக்களை ஊழியர்களிடையே விநியோகிப்பதற்குப் பொறுப்புடையவர்களாவர். இப்பொழுது நிறுவனத்தில் வேலை செய்யாத உறுப்பினர்களின் கணக்குக் கூற்றுக்களை அவர்கள் விநியோகிக்க முடியாதிருக்குமிடத்து அவற்றை ஊ.சே.நிதியத்திற்கு திருப்பியனுப்புதல் வேண்டும்.
37 அரையாண்டு உறுப்பினர் கணக்குக் கூற்றுக்களைக் கையில் எவ்வாறு பெற்றுக் கொள்வது? தொழில்தருநரினால் முகவராக நியமிக்கப்பட்டவரிடம் ஊ.சே.நிதிய உறுப்பினர்களின் கணக்குக் கூற்றுக்களைக் கையளிக்குமாறு கோருகின்ற கடிதமொன்றினை ஊ.சே.நிதியத் திணைக்களத்திடம் சமர்ப்பித்தல் வேண்டும்.
38 தொழில்தருநரொருவர் மற்றொரு தொழில்தருநரின் அரையாண்டு உறுப்பினர் கணக்குக் கூற்றுக்களைத் தவறாகப் பெற்றுக்கொள்ளும் போது என்ன செய்தல் வேண்டும்? பாதுகாப்பான முறையில் ஊ.சே.நிதியத்திற்கு அவற்றைத் திருப்பி அனுப்புதல் வேண்டுமென்பதுடன் தனது சொந்த உறுப்பினர்களின் கணக்குக் கூற்றுக்களைப் பெறுவதற்கான கோரிக்கையினையும் விடுத்தல் வேண்டும்.
39 ஊ.சே. நிதியத்திற்கு மிகையாகச் செலுத்தப்பட்ட பங்களிப்புக்களின் மீளிப்புக்களை எவ்வாறு பெற்றுக்கொள்வது? தொழில்தருநரினால் நிதியத்திற்கு மிகையாகச் செலுத்தப்பட்ட/ தவறாகச் செலுத்தப்பட்ட பங்களிப்புக்களை மீளப்பெற்றுக் கொள்வதற்கு, கொடுப்பனவு செய்த ஓராண்டு காலப்பகுதிக்குள் சரியாக நிரப்பப்பட்ட படிவம் “Q” இனைச் தொழில் ஆணையாளரூடாகச் சமர்ப்பித்தல் வேண்டும்.
40 தொழில்தருநரொருவர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்திற்கான பங்களிப்பினை ஊ.சே.நிதியத்திற்குத் தவறாக அனுப்பியிருப்பின் அத்தொழில்தருநர் என்ன செய்தல் வேண்டும்? காசோலை மற்றும் ஊ.ந.நிதியப் படிவம் என்பனவற்றினை ஊ.சே.நிதியத்திடம் விசாரிக்கவும். தவறு கண்டறியப்பட்டவுடன் சரியான தொகையினை ஊ.சே.நிதியத்திற்கு படிவம் “C” உடன் செலுத்தவும்.
41 தொழில்தருநரின் விபரங்கள் படிவம் “C” இல் தவறுதலாகப் பதியப்பட்டு அவை மத்திய வங்கிக்கு முன்னர் அடையாளம் காணப்படுமிடத்து என்ன செய்தல் வேண்டும்? திருத்தப்பட்ட படிவம் “C” இனையும் கோரிக்கைக் கடிதமொன்றினையும் ஊ.சே.நிதியத் திணைக்களத்திற்கு அனுப்புதல் வேண்டும்.
42 தனியார் சேமலாப நிதியினை ஊ.சே.நிதியத்திற்கு எவ்வாறு மாற்றல் செய்வது? ரூபா நியதிகளில் தனியார் சேமலாப நிதியின் தனிப்பட்ட கணக்குகளிலுள்ள தேறிய இறுதி நிலுவைக்குச் சமமான தொகையை கணக்காய்வு செய்யப்பட்ட படிவம் “N” உடன் தொழில் ஆணையாளரூடாக அனுப்பி வைத்தல் வேண்டும்.
43 அவசர அடிப்படையில் உறுப்பினர் கணக்குகளை இற்றைப்படுத்துவதற்கான கோரிக்கைகளை விடுக்கும் போது என்ன ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்? பின்வரும் சந்தர்ப்பங்களில் ஊ.சே.நிதிய உறுப்பினர்கள் அவர்களது கணக்குகளில் பெறப்பட்ட பங்களிப்புக்களை அவசர அடிப்படையில் இற்றைப்படுத்துமாறு கோரமுடியும்.

அ) 30 சதவீத மீளளிப்பினை எடுப்பனவு செய்வதற்காக விண்ணப்பிப்பதற்கு

ஆ) ஊ.சே.நிதிய வீடமைப்புக் கடன்களுக்கு விண்ணப்பிப்பதற்கு

இ) திருமண அடிப்படையில் மீளளிப்புக்களுக்காக விண்ணப்பிப்பதற்கு

ஈ) புலம்பெயர்தலின் மீது மீளளிப்புக்களைப் பெறுவதற்கு விண்ணப்பிப்பதற்கு

இது தொடர்பில் பின்வரும் ஆவணங்களைச் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்:

• மாதிரிப் படிவத்தின் கீழ் தொழில்தருநரின் எழுத்து மூலமான கோரிக்கை

• தொடர்பான படிவம் “C” இன் உறுதிப்படுத்தப்பட்ட உண்மைப் பிரதிகள்

44 ஊ.சே.நிதியத் திணைக்களத்துடன் உறுப்பினர்களை மீளப் பதிவுசெய்தல் கட்டாயமானதா? ஆம். ஊ.சே.நிதியத் தரவுகளில் ஊழியரின் முழுப்பெயர் மற்றும் தேசிய அடையாள அட்டை இலக்கத்தில் குறைபாடுகள் இருக்குமாயின், தொழில்தருநர்கள் அத்தகைய ஊழியர்களின் தொடர்பான ஆவணங்களைச் சமர்ப்பிப்பதன் மூலம் ஊ.சே.நிதியத்துடன் மீண்டும் பதிவுசெய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
45 ஊழியர்களைத் திரும்பப் பதிவுசெய்வது எவ்வாறு? • RR-6 படிவத்தினை ஊ.சே.நிதியத்திலிருந்து பெற்றுக்கொள்ளலாம் அல்லது இலங்கை மத்திய வங்கியின் வெப்தளத்திலிருந்து (www.epf.lk, www.cbsl.gov.lk) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

• RR-6 படிவத்தில் உறுப்பினர்களின் விபரங்களை அவர்களின் தேசிய அடையாள அட்டையிலுள்ளவாறு பூரணமாகவும் துல்லியமாகவும் நிரப்பிக் கொள்ளுதல் வேண்டும் (துல்லியமான தேசிய அடையாள அட்டை விபரங்களை வழங்குவதன் முக்கியத்துவத்தினை தொழில்தருநர் ஊழியர்களுக்குத் தெரியப்படுத்தல் வேண்டும்).

• வழங்கப்பட்ட விபரங்கள் சரிபார்க்கப்பட்டமைக்காக உறுப்பினர்களிடமிருந்து கையொப்பத்தினைப் பெற்றுக்கொள்ளுதல் வேண்டும் (கட்டாயம்).

• RR-6 படிவத்தில் தரப்பட்டுள்ள தகவல்களை, தேசிய அடையாள அட்டை விபரங்களுடன் சரிபார்த்த பின்னர் தொழில்தருநரினால் அவை உறுதிப்படுத்தப்பட்டிருத்தல் வேண்டும் (கட்டாயம்).

• RR-6 படிவத்துடன் தேசிய அடையாள அட்டைகளின் பிரதிகளை (தேசிய அடையாள அட்டைப் பிரதி தெளிவாகவும் தொழில்தருநரினால் உறுதிப்படுத்தப்பட்டதாகவும் இருத்தல் வேண்டும்) இணைத்தல் வேண்டுமென்பதுடன் தேசிய அடையாள அட்டையின் பிரதியில் ஊ.சே.நிதியத்தின் உறுப்பினர் இலக்கத்தினை தொழில்தருநர் இலக்கத்துடன் சேர்த்துக் குறிப்பிடுதலும் வேண்டும் (மீள்பதிவிற்காக மாத்திரம் தேசிய அடையாள அட்டைப் பிரதி ஏற்றுக்கொள்ளப்படும்).

• சரியாக நிரப்பப்பட்ட RR-6 படிவத்தினை தேசிய அடையாள அட்டையின்; பிரதிகளுடன் சேர்த்து மீள்பதிவுப் பிரிவு, ஊ.சே.நிதியத் திணைக்களம், இலங்கை மத்திய வங்கி, இல.30, சனாதிபதி மாவத்தை, கொழும்பு 01 இற்கு அஞ்சல் செய்தல் வேண்டும் அல்லது கையளித்தல் வேண்டும்.

46 ஏற்கனவே மீளப்பதிவு செய்யப்பட்ட ஊழியர்களின் விபரங்களை எவ்வாறு திருத்துவது? • பெயரினை அல்லது தேசிய அடையாள அட்டையினை அல்லது இரண்டினையும் திருத்துவதற்குக் கோருகின்ற ஊ.சே.நிதியத்திற்கு முகவரியிடப்பட்ட தொழில்தருநரிடமிருந்தான (கம்பனி) கடிதமொன்று.

• தேசிய அடையாள அட்டை, “B” அட்டை மற்றும் பிறப்புச் சான்றிதழ் என்பனவற்றின் பிரதிகள் (அனைத்துப் பிரதிகளும் தொழில்தருநரினால் உறுதிப்படுத்தப்பட்டிருத்தல் வேண்டும்).

• திருமணத்தின் பின்னர் பெயரை மாற்ற வேண்டியிருப்பின் உறுதிப்படுத்தப்பட்ட திருமணச் சான்றிதழின் பிரதி

• ஆட்பதிவுத் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட மூல தேசிய அடையாள அட்டை இலக்கத்தில் மாற்றம் செய்யப்படுவதனைப் பொறுத்தவரை ஆட்பதிவுத் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட கடிதம்.

47 உறுப்பினர் கணக்குக் கூற்றுக்களை பெற்றுக் கொள்ளாதிருப்பின் தொழில்தருநர் என்ன செய்தல் வேண்டும்? உறுப்பினர் கணக்குக் கூற்றுக்கள் அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன என்பதனைத் தெரிவிக்கின்ற விதத்தில் ஊ.சே.நிதியத்தினால் பத்திரிகை விளம்பரம் பிரசுரிக்கப்பட்டதும் ஊ.சே.நிதியத் திணைக்களத்தில் விசாரிக்கவும் (தொழில்தருநர் ஏற்கனவே செயற்படுபவராகவும் தொடர்பான அரையாண்டு பங்களிப்பினை உரிய நேரத்தில் செலுத்தியுமிருப்பின்).
48 போலி இலக்கங்களைத் தீர்ப்பனவு செய்வதற்கு அல்லது உறுப்பினர்களின் பங்களிப்புக்களைத் திருத்துவதற்கு வழங்கப்பட வேண்டிய ஆவணங்கள் யாவை? தொழில்தருநர்களினால் “உண்மைப் பிரதி” என உறுதிப்படுத்தப்பட்ட ஊழியரின் தேசிய அடையாள அட்டை, “B” அட்டை மற்றும் பிறப்புச் சான்றிதழ்களின் பிரதிகளுடனும் ஒவ்வொரு உறுப்பினர்களினதும் கணக்குகளுக்கான கடந்தகாலப் பங்களிப்புடனும் சேர்த்து கோரிக்கையொன்றினைச் செய்தல் வேண்டும்.