ஊழியர் சேம நிதியத்தில் பதிவுசெய்தல்

ஊழியர் சேம நிதியத்தில் தொழில்தருநரை எவ்வாறு பதிவுசெய்து கொள்வது

உங்கள் வியாபாரத்தின் தன்மையினையும் வகையினையும் கருத்திற் கொள்ளாது, ஒரு ஊழியரின் தொழில்தருநராக இருப்பினும் கூட அவர் நிதியத்திற்குப் பங்களிப்பினைச் செலுத்த வேண்டுமென சட்டத்தின் மூலம் பிணிக்கப்படுகின்றார். முதல் ஊழியர் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டு 14 நாட்களுக்குள் ‘படிவம் டி” பூர்த்தி செய்யப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டு அதன் பிரதியொன்றுடன் பதிவுஅஞ்சல் மூலம் அண்மையிலுள்ள தொழில் அலுவலகத்திற்கு அல்லது தொழில் ஆணையாளருக்கு நேரடியாக அனுப்பி வைத்தல் வேண்டும். பதிவு இலக்கம் இறை மாவட்டத்தினைக் குறிக்கும் விதத்தில் இரண்டு ஆங்கில எழுத்துக்களுடன் அனுப்பி வைக்கப்படும்.

  •  வழமையான நடைமுறையொன்றாக தொழில் திணைக்களம் புதிதாகப் பதிவுசெய்யப்பட்ட தொழில்தருநரின் விபரங்களை பதிவிற்காக ஊ.சே. நிதியத்திற்கு அனுப்பி வைக்கிறது.
  •  ஊ.சே. நிதியத்திற்கு கொடுப்பனவுகளைச் செய்வதற்கு முன்னதாக ஊ.சே. நிதிய பதிவினை மீண்டும் ஒருமுறைப் பரிசோதித்துக் கொள்வது தொழில்தருநரின் பொறுப்பாகும் (தொழில்தருநருக்கு அவரது தொழில் ஊ.சே. நிதியத்துடன் பதிவுசெய்யப்படவில்லை என்பது தெரியவருமாயின் அவர்/ அவள் ஊ.சே. நிதியக் கொடுப்பனவுகளைச் செலுத்துவதற்கு முன்னதாக தொழில்தருநர் பதிவுச்சான்றிதழின் பிரதியொன்றினைச் சமர்ப்பித்தல் வேண்டும்).

 

தொழில்தருநர் தொழில் திணைக்களத்தில் எவ்வாறு பதிவுசெய்துகொள்வது!
  •  தொழில்தருநர் வியாபாரம் தொடங்கும் நாளன்று ஷடி| படிவத்தினைப் பூர்த்திசெய்து (ஊ.சே. நிதியத்தில் தொழில்தருநரைப் பதிவுசெய்கின்ற விண்ணப்பம்) சமர்ப்பித்தல் வேண்டும்.

டி படிவ இணைப்பு

  •  தொழில் திணைக்களத்திலிருந்து தொழில்தருநர் பதிவுச் சான்றிதழை எவ்வாறு பெற்றுக்கொள்ளுவது. (தொழில் திணைக்களம் ஆங்கில எழுத்துக்களுடன் ஆரம்பிக்கும் தொழில்தருநர் பதிவு இலக்கத்தினை வழங்கும்). தொழில்தருநர் அவரின்Æ அவளின் தொழில் தொடர்பான ஊ.சே. நிதிய விசாரணைகளுக்கு குறிப்பிட்ட இலக்கத்தினையே பயன்படுத்த வேண்டியிருக்கும்).

 

தொழில்தருநரின் விபரங்களை ஊ.சே. நிதியத்தில் எவ்வாறு மாற்றுவது
  •  அஞ்சல் முகவரியினைÆ தற்காலிக முகவரியினை மாற்றுவதற்குத் தொழில்தருநர் ஊ.சே. நிதியத்திற்கு எழுத்து மூலமாக கோரிக்கை விடுத்தல் வேண்டும்.
  • நிரந்தர முகவரிÆ தொழில்தருநரின் பெயரை மாற்றுவதற்கு அல்லது தொழில்தருநர் தொழிற்படாதிருப்பதற்கு தொழில்தருநர் தொழில் திணைக்களத்திற்கு எழுத்து மூலமான கோரிக்கையினை விடுத்தல் வேண்டும். தொழில் திணைக்களத்திலிருந்து உறுதிப்படுத்தல் கிடைத்தமையின் பின்னர் கோரிக்கையின்படி ஊ.சே. நிதியம் தகவல்களில் மாற்றங்களைச் செய்யும்.
  • கம்பனி மூடப்பட இருக்குமாயின் தொழில் திணைக்களத்தின்; உறுதிப்படுத்தலுடன் ஊ.சே. நிதியத்திற்கு அதனை அறிவிப்பதனை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

 

ஊழியர்களைச் சேர்த்துக் கொள்ளுதல்

pயர் அவர் வேலை செய்யும் முதல் நாளிலிருந்து ஊ.சே. நிதியத்தின் அங்கத்துவத்தினைப் பெறுவதற்கு உரித்துடையவராவர். ஊழியரை ஊ.சே. நிதியத்தில் சேர்த்துக்கொள்வது தொழில்தருநரின் பொறுப்பாக இருப்பதுடன் தொழில்தருநர் அவ்வாறு பதிவுசெய்வதனைத் தூண்டுவது ஊழியரின் பொறுப்பாகும்.

 

தொழில்தருநர் பின்வரும் ஊழியர்கள் ஊ.சே. நிதியத்திற்கு உரித்துடையவர்கள் என்பதில் கரிசனையுடையவராக இருத்தல் வேண்டும்
  •  தொழிலின் தன்மையினைக் கவனத்தில் கொள்ளத் தேவையில்லை. அனைத்து ஊழியர்களும் அவர்கள் நிரந்தரமாக, தற்காலிகமாக, அமைய, அல்லது மாற்று நேர அடிப்படையான வேலையாட்களாக இருப்பினும் அவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுதல் வேண்டும்.
  •  செய்யும் வேலையின் அளவு அடிப்படையில், ஒப்பந்த அடிப்படையில் தரகு அடிப்படையில் தொழில்புரியும் ஊழியர்கள்.
  •  குடும்ப உறுப்பினர்கள் வேலையில் ஈடுபடுகின்ற நிறுவனங்களைப் பொறுத்தவரையில் பங்களிப்புக்களைச் செலுத்த வேண்டிய அவசியமில்லாத போதும் வெளிஊழியர் ஒருவர் அதே வியாபாரத்திற்கு ஆட்சேர்ப்புச் செய்யப்படுமிடத்து அத்திகதியிலிருந்து அவருக்கு பங்களிப்பினைச் செலுத்துதல் வேண்டும்.
  •  பணிப்பாளர்கள், பங்களார்கள், அவர்கள் வழங்கும் பணிக்காகச் சம்பளம்Æ படியினைப் பெறுபவர்களாக இருப்பின் அவர்கள்
  •  ஓய்வூதியம் பெறுகின்ற ஆளாக இருப்பினும் கூட ஸ்தாபனமொன்றில் பணியாற்றும் ஆட்கள்
  •  பாடசாலை நேரத்திற்குப் பின்னர் வேலை செய்யும் 14 வயதிற்கு மேற்பட்ட பள்ளிக்கூடச் சிறுவர்கள்
  •  இன்னொரு நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் வேளையில் மற்றொரு நிறுவனத்தில் பணிபுரியும் ஆட்கள்
  •  குறுகிய காலப்பகுதிக்கு மட்டுப்படுத்தப்பட்ட நேரத்தில் தொழில்புரியும் ஆட்கள்
  •  நன்மைகளின் மீளளிப்பினை பெற்றுக்கொண்டதன் பின்னர் அதே நிறுவனத்தில் அல்லது மற்றொரு நிறுவனத்தில் தொழில்புரியும் ஆட்கள்.
  •  வெளிநாட்டிலிருந்து வந்து உள்;ரில் தொழில்புரியும் ஆட்கள்.

 

ஊழியர் சேம நிதியத்திற்கு பங்களிப்புக்களைச் செலுத்தத் தேவையில்லாத தரப்பினர்கள்
  •  நிறுவனங்கள், சிறுகுற்றவாளிகள், ஆதரவற்றவர்கள், காது கேளாதவர்கள் மற்றும் பார்வையற்றவர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சிகளை வழங்குகின்ற சமூக சேவை நிறுவனங்களாக இருக்குமிடத்து
  •  பத்து (10) ஊழியர்களுக்கும் குறைவானவர்களைக் கொண்ட அறக்கொடை அமைப்புக்கள்
  •  குடும்ப அலகு உறுப்பினர்கள் ஊழியர் சேம நிதியத்திற்குப் பங்களிப்புக்களைச் செய்ய வேண்டுமென்று இதுவரை கேட்டுக் கொள்ளப்படவில்லை.

 

உறுப்பினர்களைப் பதிவுசெய்தல்
  •  புதிய ஊழியர்கள் அவர்Æ அவள் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டு 14 நாட்களுக்குள் பதிவுசெய்யப்படுவதனை உறுதிப்படுத்திக் கொள்ளுதல் வேண்டும்.
  • புதிய ஊழியர்களுக்கு ஷஏ|, ஷபீ|, ஷஎச்| படிவங்களை வழங்குவதுடன் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் தொழில் திணைக்களத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் (பதிவின் போது தேசிய அடையாள அட்டை விபரங்கள் வழங்கப்படுவதனை உறுதிப்படுத்திக் கொள்ளவும்).

ஏ, பீ, எச் படிவ இணைப்பு

  • உறுப்பினர் இலக்கத்தினை எண்கணித இலக்க ஒழுங்கில் வழங்குவதனை உறுதிப்படுத்திக்கொள்ளவும். இரண்டு இலக்கங்களை வழங்குவதனை தவிர்க்கவும்.
  • தொழில் திணைக்களத்தினால் கையொப்பமிடப்பட்ட ஷபீ| அட்டையினை பெற்றுக்கொள்ளவும். ஒவ்வொரு ஊழியர்களுக்கும் ஷபீ| அட்டை வழங்கப்பட்டமையினை உறுதிப்படுத்திக்கொள்வும்.
  • ஊழியர் தொடர்பான விபரங்களைத் திருத்துவதற்கு ஊழியருக்குத் தேவையிருக்குமாயின் ஊழியருடன் ஒத்துழைக்கவும்.
  • ஊழியர் இராஜினாமாÆ ஓய்வுÆ அல்லது விலகுமிடத்து ஊ.சே. நிதியத்திற்கு அறிவிப்பதனை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
  • உறுப்பினர்கள் தமது ஷபீ| அட்டையைத் தொலைத்திருப்பின் மற்றொரு ஷபீ| அட்டையை எவ்வாறு பெற்றுக்கொள்ள முடியுமென்பது பற்றி உறுப்பினருக்கு அறிவூட்டவும்.

 

தேசிய அடையாள அட்டைத் தகவலின் கீழ் உறுப்பினர்களை மீள்பதிவு செய்தல்

தொழில்தருநர்கள் மற்றும் உறுப்பினர்கள் இருவருக்கும் வினைத்திறன்மிக்க பணியினை வழங்கும் பொருட்டு இலங்கை மத்திய வங்கியும் தொழில் திணைக்களமும் இணைந்து அனைத்து உறுப்பினர்களையும் அவர்களது தேசிய அடையாள அட்டையின் தகவல்களின்படி மீளப்பதிவு செய்துகொள்ளவும் தேசிய அடையாள இலக்கத்தினை அவர்களின் தனித்துவமான அடையாள இலக்கமாக வழங்குவதற்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டன.

தொழில்தருநர்கள் அவர்களது நிறுவனங்களில் புதிதாகச் சேர்ந்து கொண்ட புதிய ஊழியர்களின் தேசிய அடையாள அட்டையின் விபரங்களைப் ஆர்ஆர்-6 படிவத்தில் நிரப்பிக் கொள்ளுமாறு தயவுடன் கேட்டுக் கொள்ளப்படுகின்றதுடன் இதனை அவர்களது முதலாவது பங்களிப்பு சமர்ப்பிக்கப்படும் நேரத்தில் சமர்ப்பித்தலும் வேண்டும். தேசிய அடையாள அட்டை தகவலின் கீழ் இன்னமும் பதிவுசெய்யப்படாதிருக்கும் ஏற்கனவேயுள்ள ஊழியர்களின் தேசிய அடையாள அட்டை விரபங்கள் அதே படிவம் ஆர்ஆர்-6இல் தரப்படுதல் வேண்டும். ஊழியர்களின் தேசிய அடையாள அட்டையின் பிரதி ஆர்ஆர்-6 படிவத்துடன் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்.

 

தேசிய அடையாள அட்டைப் பிரதி பின்வருவனவற்றை உள்ளடக்கியிருத்தல் வேண்டும்.

  1.  ஊ.சே. நிதிய உறுப்பினர் இலக்கம்
  2. தேசிய அடையாள அட்டையில் காணப்படுகின்றவாறு முதலெழுத்துக்களுடன் பெயர்
  3. தரப்பட்டுள்ள விபரங்களை உறுதிப்படுத்தும் விதத்தில் உறுப்பினர்களின் கையொப்பம்
  4. தேசிய அடையாள அட்டை தொடர்பில் தொழில்தருநரின் சான்றுபடுத்தல்

 

படிவம் ஆர்ஆர்-6 இல் உள்ள தேசிய அடையாள அட்டையின் விபரங்களைத் தொழில்தருநர் தேசிய அடையாள அட்டையினைச் சரிபார்த்ததன் பின்பே உறுதிப்படுத்துதல் வேண்டும்.
  • இச்செயற்றிட்டத்தின் கீழ் பெரும்பாலான தொழில்தருநர்கள் அவர்களது ஊழியர்களின் தேசிய அடையாள அட்டை விபரங்களை ஏற்கனவே வழங்கியுள்ளனர்.
  • படிவம் ஆர்ஆர்-6 இன் ஊடாக வழங்கப்பட்டு இன்னமும் மீளப்பதிவு செய்யப்படாதிருக்கும் ஏற்கனவேயுள்ள ஊழியரொருவரின் அடையாள அட்டையில் காணப்படுகின்றவாறான பெயருக்கும் படிவம் சிÆசி3 இல் குறிப்பிடப்பட்டுள்ள பெயருக்குமிடையில் வேறுபாடு ஏதேனும் இருக்குமாயின், தொழில்தருநர்கள் ஆர்ஆர்-2 படிவத்துடன் அவர்களது தேசிய அடையாள அட்டையின் பிரதியை சேர்த்து அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
  • மேலதிக விளக்கங்களுக்கு தயவுசெய்து 0112477219 அல்லது 0112477159 இலக்கங்களில் மீள்பதிவுப் பிரிவினை தொடர்பு கொள்ளவும்.

 

உறுப்பினர்களின் இராஜினாமா

தேசிய அடையாள அட்டைத் தகவல்களைப் பயன்படுத்தி அனைத்து ஊழிய சேமலாப நிதிய உறுப்பினர்களுக்குமான மீள்பதிவுச் செயன்முறையினை இலங்கை மத்திய வங்கியின் ஊழிய சேமலாப நிதியத் திணைக்களம் முன்னெடுக்கின்றது. உறுப்பினர்கள் மற்றும் தொழில்தருநர்கள் ஆகிய இரு சாராரினதும் சேவை வினைத்திறனை மேம்படுத்துவதை இம்முயற்சி இலக்காகக் கொண்டுள்ளது. புதிதாக ஆட்சேர்ப்புச் செய்யப்படும் ஊழியர்களின் தற்போதைய தேசிய அடையாள அட்டை இலக்கங்களைக் கொண்டு “RR” படிவத்தினைப் பூர்த்திசெய்து அதற்கேற்றவாறு அதனை சமர்ப்பிக்குமாறு தொழில்தருனர்கள் வேண்டப்படுகின்றனர். இக்கருத்திட்டத்தின் கீழ் இதுவரையிலும் மீள்பதிவுசெய்யப்படாத ஏற்கனவேயுள்ள ஊழியர்களின் தற்போதைய தேசிய அடையாள அட்டை விபரங்களும் அதே “RR” படிவத்தில் வழங்கப்பட வேண்டும்.

வழிகாட்டல்கள் தரவிறக்கம்“RR” படிவம் தரவிறக்கம்முகப்புப் கடிதம் தரவிறக்கம்இணையவழி/செல்லிடத் தொலைபேசிப் பயன்பாட்டாளர்களுக்கான ஊ.சே.நி. தகவல் சேவைகள் தரவிறக்கம்