🚨முக்கிய அறிவித்தல்🚨

அட்டவணைப்படுத்தப்பட்ட முறைமை பராமரிப்பு

இணைய மற்றும் நேரடி சேவைகளின் தற்காலிக இடைநிறுத்தம்

ஊழியர் சேமநிதியத் திணைக்களம் (EPFD), தனது மதிப்பிற்குரிய உறுப்பினர்கள், தொழில் வழங்குநர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும், முறைமையின் கட்டாய வருடாந்த தரவேற்றல் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதை இதன் மூலம் அறியத்தருகிறது.

இம்முக்கிய தரவேற்றல் பணிகளை மேற்கொள்வதற்காக, கீழே குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் வழங்கப்படும் அனைத்து இணையவழி சேவைகள், இணையத்தள அணுகல்கள் மற்றும் நேரில் வருகை தரும் உறுப்பினர்கள் மற்றும் தொழில் வழங்குநர்களுக்கான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுகின்றன.

  • ஊழியர் சேமநிதியத் திணைக்களத்தின் பிரதான சேவை நிலையம்
    (வைட்எவேஸ் கட்டிடம், இல. 25, சேர் பரோன் ஜயதிலக மாவத்தை, கொழும்பு 01)
  • இலங்கை மத்திய வங்கியின் அனைத்து பிரதேச அலுவலகங்கள்

தொடக்கம்: 2026 மே 8, வெள்ளிக்கிழமை, நண்பகல் 12:00 மணி
மீளமைப்பு: 2026 மே 11, திங்கட்கிழமை, நண்பகல் 12:00 மணி

இத்தற்காலிக இடைநிறுத்தத்தால் ஏற்படக்கூடிய எந்தவொரு அசௌகரியத்திற்கும் மன்னிப்பு கோருவதுடன் உயர்தர சேவைகளை வழங்கும் எமது முயற்சிகளுக்கான உங்கள் பொறுமைக்கும் ஒத்துழைப்பிற்கும் நன்றி.


நிர்வாகம்
ஊழியர் சேமநிதியத் திணைக்களம்